68 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை வானில் தோன்றுகிறது ‘சூப்பர் நிலா’

நிலா பூமிக்கு அருகில் வரும் நாள்தான் சூப்பர் நிலவு என்று கூறப்படுகிறது. அதன்படி 68 ஆண்டுகளுக்கு பிறகு நாளை வானில் சூப்பர் நிலவு தோன்றுகிறது...

நிலா பூமிக்கு அருகில் வரும் நாள்தான் சூப்பர் நிலவு என்று கூறப்படுகிறது. அதன்படி 68 ஆண்டுகளுக்கு பிறகு நாளை வானில் சூப்பர் நிலவு தோன்றுகிறது.  இந்த நிகழ்வின் போது நிலா
வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடனும்  தோன்றும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கடைசியாக கடந்த 1948-ம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியுள்ளது. அதன்படி நாளை காலை 6.21 மணிக்கு பூமிக்கு அருகில் வரும் என்றும், 8.52 மணிக்கு முழு நிலவையும் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது. 221, 523 மைல்கள் தொலைவில் நிலா வருவதால் நாளைய நிகழ்வு இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சூப்பர் நிலவாக இருக்கும் என்கின்றனர். நாளை தோன்றும் சூப்பர் நிலவு அடுத்ததாக 2034-ஆம் ஆண்டுதான் வருமாம்.

மேலும் பல...

1 comments

Search This Blog

Blog Archive

About