இவர்தான் பாலாவின் அடுத்த பட ஹீரோ! பாலாவின் நிலைமை இப்படி ஆகிருச்சே?

உலக சினிமாவாகவும் இல்லாமல், உள்ளூர் சினிமாவாகவும் இல்லாமல், எள்ளு செடியில் கொள்ளு விளைந்த மாதிரி சமயங்களில் படுத்தி எடுப்பார் பாலா! அவரத...

உலக சினிமாவாகவும் இல்லாமல், உள்ளூர் சினிமாவாகவும் இல்லாமல், எள்ளு செடியில் கொள்ளு விளைந்த மாதிரி
சமயங்களில் படுத்தி எடுப்பார் பாலா! அவரது லட்சிய சினிமாக்களின் காலம் முடிந்து அலட்சிய சினிமாக்களின் ஆதிக்கம் வளர வளர… பாலா என்றொரு இயக்குனரை திரிந்துப்போன பாலாக நினைத்து ஒதுக்க ஆரம்பித்துவிட்டது ரசிகர்களின் மனசு! கடைசியா பாலா ஹிட் கொடுத்து ஆறு வருஷம் இருக்குமா? “ஞாபகமில்ல… அதை விடு, அந்த சொப்பன சுந்தரி பாட்டை கேட்டியா மாப்ளே”ன்னு போய் கொண்டே இருக்கிறான் ரசிகன்!

இந்த நேரத்தில் முன்னணி நடிகர்களும் பாலாவுக்கு கால்ஷீட் கொடுக்க அஞ்சுவதால், அங்க சுத்தி இங்க சுத்தி, கடைசியில் தன் சொந்த விரலில் நகச்சுத்தி வந்த சோகத்தை மறைக்க ஒரு அவசர சினிமா எடுக்க நினைக்கிறாராம் பாலா. அது நெஞ்சை கிளறும் காதல் கதை என்றும் கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். அந்த அற்புத திரைப்படத்தில் நடிக்க, பாலா தேர்ந்தெடுக்கும் அழகன் யார் தெரியுமா? சாட்டை, கமர்கட்டு , போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து, இன்னும் சிலேட்டில் விழுந்த முட்டை மார்க்குகளை அழிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் யுவன் என்கிற இளைஞர். (தம்பியோடு ஓவர் ஆக்டிங்குக்கு பாலா வச்சு புழிஞ்சுடுவாரே?)

இந்தப்படத்தை அவசர கால தயாரிப்பாக எடுக்க நினைக்கிறாராம் அவர். பூஜை போட்டு ஆறாவது மாதத்தில் படம் திரைக்கு வந்துவிட்டால், அதுதான் பாலாவின் சாதனை! ஓடுதா, படுக்குதா என்பதெல்லாம் அதற்கப்புறம் பேச வேண்டிய சங்கதி!

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog