அனுபவம்
நிகழ்வுகள்
முதல்வர் எப்போது வீடு திரும்புவார்? அப்போலோ பிரதாப் ரெட்டி பதில்
November 04, 2016
முதல்வர் ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்த கேள்விக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகத் தலைவர் பிரதாப்ரெட்டி பதில் அளித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 44-வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வரின், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக முதல்வருக்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் நேற்று எடுக்கப்பட்டது. தற்போது, அவர் நன்றாக சுவாசிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப்ரெட்டி இன்று விளக்கம் அளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் வேகமாக குணமடைந்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தன்னைப் பற்றி என்ன நடக்கிறது என்பதை முதல்வர் உணர்ந்து வருகிறார். முதல்வர் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு மருத்துவரோ, ஒரு மருத்துவமனை மட்டும் அல்ல, மிகப்பெரிய மருத்துவர்கள் கொண்ட குழு ஒருங்கிணைந்து அவருக்கு சிகிச்சை அளிக்கிறது. முதல்வர் எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரேதான் முடிவு செய்வார் என நினைக்கிறேன்" என்றார்.

0 comments