ஓ…கடைசியில கதை இப்படி போகுதா?

சினிமா வேறு… பர்சனல் வேறு என்பது தென்னிந்தியாவிலும் இல்லை. வட இந்தியாவிலும் இல்லை! அடுத்தவர் குடும்பத்தில் மூக்கை நுழைத்து அகப்பட்ட வரைக்கு...

சினிமா வேறு… பர்சனல் வேறு என்பது தென்னிந்தியாவிலும் இல்லை. வட இந்தியாவிலும் இல்லை! அடுத்தவர் குடும்பத்தில் மூக்கை நுழைத்து அகப்பட்ட வரைக்கும் சுவாசிக்கும் அன்பு உள்ளங்கள் நிறைந்த திருநாட்டுக்குதான் அவ்வப்போது
கிசுகிசுக்களை தந்து வாழ விடுகிறார்கள் நடிகர்களும், நடிகைகளும். போன வாரம் ரம்பா. அதுக்கு முந்தைய வாரம் வரைக்கும் அமலாபால். இந்த வாரம் யாருப்பா? என்று மூக்கு நுனியை சொறிகிற நேரத்தில்தான் தானாய் வந்து சிக்கினார் கவுதமி. காதும் காதும் வைத்த மாதிரி பிரிந்துத் தொலைய வேண்டியதுதானே?

கவுதமி கமல் வீட்டில்தான் குடியிருக்கிறாரா, அல்லது ஆழ்வார்பேட்டையை காலி பண்ணிவிட்டு, அயனாவரத்துக்கு போய் விட்டாரா என்று எவன் கேட்கப் போகிறான்? ஆனால் ஊர் உலகத்தையே உறங்கவிடாமல் பண்ணிவிட்டது கவுதமியின் விலகல் அறிக்கை.

என்னதான் நடந்தது? அடுக்கடுக்காக ஆழ்துளை போட்டு அலசியதில் ஒரு விஷயம் பளிச்சென்று தெரிய வந்திருக்கிறது. சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு போயிருந்தாரல்லவா கமல்? அப்படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் என்ற வகையிலும் இன்னும் சில வகையிலுமாக சேர்ந்து கவுதமியும் போயிருந்தார் அங்கே. போன இடத்தில் இவருக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் ஒத்துப்போகவில்லை. அதனால் நான்கு நாட்கள் அப்பாவையும் மகளையும் நிம்மதியாக விட்டுவிட்டு சென்னைக்கு திரும்பியிருந்தார் அவர்.

இவர் இந்தப்பக்கம் வந்ததும் அந்தப்பக்கம் காத்திருந்த பூனை ஒன்று தயிர் பானையை தட்டிவிட்டுவிட்டதாம். அப்புறம் என்ன? பானையும் பூனையும் புரண்டு புரண்டு விளையாட….சென்னைக்கு வந்த கவுதமிக்கு வந்து சேர்ந்ததாம் தகவல். பூனை காலி. பானையும் காலி என்று. விழுந்தடித்துக் கொண்டு ஓடியவர், பூனையை போட்டு பொளந்து கட்டிவிட்டார். அந்த நிமிஷத்திலிருந்தே சொத்து பத்து சொந்த பந்த விவகாரங்களுக்கு மதில் சுவரும் கட்டிவிட்டாராம்.

பின்குறிப்பு- இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog