ஜெயமோகனும் இல்லை! எஸ்.ராவும் இல்லை! புதிய முடிவில் பாலா!

இலக்கிய உலகத்தின் எம்.ஜி.ஆர் , சிவாஜியாக திகழ்க்கிறார்கள் எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும். எவ்வளவுதான் அற்புதமான எழுத்...

இலக்கிய உலகத்தின் எம்.ஜி.ஆர் , சிவாஜியாக திகழ்க்கிறார்கள் எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும். எவ்வளவுதான் அற்புதமான எழுத்தாளர்களாக இருந்தாலும், சினிமா வெளிச்சம் பட்டால் அதன் அழகே தனி. இலக்கிய உலகத்தின் சாம்ராட்டுகளான இருவருமே பாலாவின் படத்தால் உலகறியப்பட்டார்கள். அதற்கு முன்பே சண்டைக்கோழிக்கு வசனம் எழுதியவர்தான் எஸ்.ரா. இருந்தாலும் பாலாவின் படம் என்றால் தன் அந்தஸ்து உண்டல்லவா?

எப்படி பாலாவை விட்டு ஒவ்வொரு ஹீரோக்களாக ஓடி ஒளிகிறார்களோ… அப்படியே இவர்களும் ஓடி ஒளிந்துவிட்டார்களா என்ன? இந்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது ஒரு விஷயம். பாலா தற்போது தயாரித்து இயக்கி வரும் படத்தில் பிரபல நடிகர் நடிகைகள் ஒருவரும் இல்லை. சாட்டை படத்தில் ஹீரோவாக நடித்து ஓரளவுக்கு பெயர் வாங்கிய யுவன் என்ற சின்ன பையன்தான் ஹீரோ. ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வென்ற ஒரு இளம்பெண்தான் ஹீரோயின்.

இந்தப்படத்திற்குதான் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் ரமணகிரிவாசன்  என்பவர் வசனம் எழுதியிருக்கிறாராம். ஒருவேளை இந்தக்கதைக்கு இவர் எழுதினால் பொருத்தமாக இருக்கும் என்று பாலா கருதியிருக்கலாம். சாம்ராட்டுகளை வென்று சாதனை படைப்பாரா புதியவர்? காத்திருக்கிறோம்…

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog