அனுபவம்
நிகழ்வுகள்
நெஞ்சுவலியால் துடித்த ராமராஜன் மருத்துவமனையில் அனுமதி - விவாகரத்தானாலும் ஓடி வந்த மனைவி
November 07, 2016
கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழகமெங்கும் பட்டிதொட்டி கிராமத்தில் கூட ராமராஜன் என்ற பெயர் தெரியாதவர்கள் இல்லை. கிட்டத்தட்ட 1 வருட காலம் தமிழகமெங்கும் ஓடியது கரகாட்டக்காரன்.
அதன் பிறகு ராமராஜன் சினிமா வாழ்க்கை ஏறுமுகம் தான், திரையுலகில் உச்சத்தில் இருந்த போது பிரபல நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்நிலையில் ராமராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், அவரை அருகில் இருந்து அவருடைய மனைவி நளினி கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 1998 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் மக்களவை சார்பில் போட்டியிட்டு அப்பகுதியின் எம்பியாக ஆனார்.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது இவரை மிகவும் பாதித்ததாகவும், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகவலை ராமராஜன் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து சென்ற நளினி அவரை கூடவே இருந்து கவனித்து வருகிறாராம்

0 comments