அனுபவம்
நிகழ்வுகள்
மீண்டும் நடிப்பு! திகில் கிளப்பும் விஜயகாந்த்! ஆடும் வளரணும். செடியும் பிழைக்கணும்னா… கொஞ்சம் கஷ்டம்தான்!
November 07, 2016
தெலுங்கு ஸ்டார்களும் சரி, கேரள ஸ்டார்களும் சரி. அவ்வளவு ஏன்? கலகலத்துப் போகிற வயசில் கதாநாயகிகளை கட்டியணைக்கும் கன்னட ஸ்டார்களும் சரி. தங்களது வாரிசுகளை எப்படி களம் இறக்கினால், நாற்காலிக்கு வலு சேர்க்க முடியும் என்பதை மிக மிக தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்சினிமாவையே ஒரு காலத்தில் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த கேப்டன் விஜயகாந்த் அந்த விஷயத்தில் பச்சை மண்ணாக இருந்துவிட்டாரே… என்று கவலைப்படுகிறவர்கள் இப்போதும் உண்டு.
சண்முக பாண்டியனின் உடல் வாகுக்கும் நடிப்பு திறனுக்கும் ஏற்ப ஒரு கதையை உருவாக்கி, அந்த படத்தை வெற்றிப்படமாக்கியிருந்தால், விஜயகாந்தின் சினிமா சர்வீஸ் இன்னும் போற்றப்பட்டிருக்குமே என்பதுதான் பலரது கருத்து!
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. சண்முக பாண்டியனின் இரண்டாவது படமான ‘தமிழன் என்று சொல்’ மீண்டும் தூசு தட்டப்பட்டு விட்டது. இதில் ஒரு முக்கிய வேடத்தில் விஜயகாந்தே நடிக்கிறார். இவர் கண்ட இடத்திலும் மூக்கை நுழைக்காமல் இயக்குனரின் சுதந்திரத்திற்கு இடையூறு இல்லாமல் நடந்தாலே சண்முக பாண்டியனுக்கு நல்லது என்று பலரும் கருதி வருகிறார்கள்.
ஆனால் நிலைமை அப்படியா என்பதுதான் டவுட். நைந்து போயிருக்கும் தனது கட்சிக்கு கஷாயம் பாய்ச்சி எழுப்ப வேண்டும் என்று நினைக்கிறாராம் விஜயகாந்த். அதற்காகவே சில காட்சிகளை சித்தரிக்க சொல்கிறாராம். இந்த பேராபத்திலிருந்து மக்கள் தப்பிக்க வேண்டும் என்றால் கட்சி முன்பு போல வளர வேண்டும். ஆனால் முன்பு போல கட்சி வளர வேண்டும் என்றால் நான் நடித்தாக வேண்டும் என்கிறாரே கேப்டன்?
ஆடும் வளரணும். செடியும் பிழைக்கணும்னா… கொஞ்சம் கஷ்டம்தான்!

1 comments
vijay raj /kanth has no scope either in movies or in politics....all know that
ReplyDelete