அனுபவம்
நிகழ்வுகள்
இந்த ஊரே வேண்டாம்! குடும்பத்தோடு கிளம்புகிறார் கமல் EXCLUSIVE
November 07, 2016
‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று ரசிகர்கள் வாழ்த்து கோஷம் இடுவதை சற்றே நமுட்டு சிரிப்போடு ரசிப்பது ‘ஆண்டவனே இல்லை’ என்று சொல்கிற கமலின் சுவை முரண்! ஆனால் இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர் அங்கிருந்து கிளம்பி நீலாங்கரை பங்களாவுக்கு போய் இரண்டு வருஷங்களுக்கு மேலாச்சு. ஆனாலும் கமலின் இளமைப்பருவம் கழிந்த ஆழ்வார்பேட்டை வீடு, அலுவலகமாக செயல்பட்டு வந்ததில் எந்த சிரமமும் இருந்ததில்லை.
தினந்தோறும் இங்கு வரும் கமல், பல்வேறு நல்ல கெட்ட விஷயங்களை இங்கிருந்துதான் டீல் பண்ணியிருக்கிறார். “நான் இந்தியாவை விட்டே போறேன்” என்று அதிர்ச்சி கிளப்பியதும் இந்த பில்டிங்கில் இருந்த போதுதான். அதற்கப்புறம் மாடியிலிருந்து தடுக்கி விழுந்து காலை உடைத்துக் கொண்டு இன்னும் கட்டோடு நடமாட காரணமாக இருப்பதும் இந்த ஆழ்வார்பேட்டை ஆபிஸ்தான். நிற்க…
இனிமேல் இந்த ஆபிசும் சரி. நீலாங்கரை பங்களாவும் சரி. கமல் பாதம் படுவதற்கு காத்துக் கிடக்க வேண்டும். அல்லது படாமலே போகக் கூட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. காரணம்?
மஹாபலிபுரம் தாண்டி கல்பாக்கத்திற்கு முன் சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான இடத்தில் வீடு கட்டி வருகிறார் கமல். சென்னையிலிருந்து கிட்டதட்ட 70 கி மீ தள்ளி அமைந்துள்ளது இந்த இடம். வீடு மட்டுமல்ல, சினிமா ஷுட்டிங்குக்கு தேவையான சகல வசதிகளும் கொண்ட ஹாலிவுட் ஸ்டூடியோவின் மினியேச்சர் போல தயாராகிக் கொண்டிருக்கிறது அது. இவர் மட்டுமல்ல, இவர் அலுவலகத்தில் இதுவரை வேலை பார்த்து வந்த பணியாளர்களுக்கும் அங்கே வீடு கட்டிக் கொண்டிருக்கிறாராம் கமல். பணியாளர்களுக்கே வீடு கட்டிக் கொடுக்கிற கமல், மகள்களுக்கும் கட்ட மாட்டாரா என்ன? அவர்களுக்கும் பிரமாண்டமான பங்களா தயாராகி வருகிறதாம். இன்னும் சில மாதங்களில் எல்லாரும் இங்கிருந்து ஷிப்ட் ஆகிறார்கள்.
சினிமா எடுப்பதற்கு சென்னையில்தான்… அதுவும் கோடம்பாக்கத்தில்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தையெல்லாம் சுருக்கி நொறுக்கிவிட்டது விஞ்ஞானம். கமல் மாதிரி ஜீனியஸ்களுக்கும் விஞ்ஞானத்தை சரியாக உபயோகிப்பவர்களுக்கும் இந்த 70 கி.மீ என்பது ஒரு தூரமேயில்லை.
மிக முக்கியமான குறிப்பு- இந்த ஸ்டூடியோவுக்கான பிளான், மற்றும் கட்டுமானப் பணிகளை பார்த்து பார்த்து கவனித்து வந்த கவுதமி, இனிமேல் அந்த கோட்டைக்குள் நுழைய முடியுமா என்பதுதான் கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீரை ஸ்பிரே பண்ணுகிற அளவுக்கு தொண்டையை அடைத்துக் கொள்கிற கேள்வி.

1 comments
annatthe sarika kkooda mottai madiyilirinthu keele vizhundathum indha vooduthan...
ReplyDelete