என் முன்னாடி அவன் வரவே கூடாது! வடிவேலு ஆத்திரம்!

வடிவேலு திண்ணையை காலி பண்ணிய பின்பு, பெரும் கூட்டம் ஏறிக் கொண்டது அங்கே. அதில் பாதிக்கும் மேல் புளியங் கொட்டைகள்தான். தப்பித்தவறி ஒன்றிரண்ட...

வடிவேலு திண்ணையை காலி பண்ணிய பின்பு, பெரும் கூட்டம் ஏறிக் கொண்டது அங்கே. அதில் பாதிக்கும் மேல் புளியங் கொட்டைகள்தான். தப்பித்தவறி ஒன்றிரண்டு முந்திரிக் கொட்டைகளும் அந்த திண்ணையில் ஒதுங்கியது தமிழனின் பூர்வ ஜென்ம புண்ணியம். சூரி சந்தானம் என்று சிலர் மட்டுமே வடிவேலுவின் இடத்தை நிரப்பி “கவலைப்படாதே ராசாங்களா… நாங்க இருக்கோம்” என்று மகா ரசிகன் ஒவ்வொருவரையும் ஆறுதல் படுத்தினார்கள். இதில் சந்தானம் மட்டும், ‘இனிமே ஹீரோதான்’ என்ற முடிவை எடுத்ததும், இன்டஸ்ட்ரியில் பெரிய பள்ளம் விழுந்தது. அதை நிரப்பும் விதத்தில் ராப் பகல் பாராமல் உழைக்க ஆரம்பித்தார் சூரி.

யோகிபாபு, சதீஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் என்று சிலர் செய்த காமெடி சேஷ்டைகளை அவ்வப்போது டி.வி யில் பார்த்து சோடா குடித்து ஜீரணித்துக் கொண்ட வடிவேலுவுக்கு, சூரியின் பர்பாமென்ஸ்சுக்கு மட்டும் அடி வயிறு கலங்க கலங்க ஆத்திரம் வந்தது. ஏன்? சூரியின் சேஷ்டைகள் அப்படியே வடிவேலுவை ஒத்திருந்ததுதான். இதெல்லாம் பழங்கதை.

இப்போது என்னவாம்? விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கிய கத்தி சண்டை படத்தில் வடிவேலுவும் சூரியுமே நடிக்கிறார்கள். ஆனால் சேர்ந்தல்ல… தனித்தனியாக. முதல் பாதியில் ஒருவரும், இரண்டாம் இன்னொருவருமாக பிரித்துக் கொண்டாலும், ஒரு காம்பினேஷன் காட்சி இருந்தால் அமோகமாக இருக்குமே என்று நினைத்தாராம் சூரி. ஆனால் வடிவேலு ஒப்புக் கொண்டால்தானே? “தப்பித் தவறி கூட என் கண்ணுல படக் கூடாது அவன்” என்று ஸ்டிக்டாக சொல்லிவிட்டாராம்.

பல வருஷம் லீவு போட்டுவிட்டு ஆபிசுக்குள் என்ட்ரி ஆகியிருக்கும் வடிவேலுவை, அன்றாடம் ஆபிசுக்கு வந்து போய் கொண்டிருந்த சூரி காலி பண்ணிவிடாமல் இருக்கணும். அதுதான் இப்போதைய பரபரப்பு

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About