சினிமா
நிகழ்வுகள்
அண்டாவுக்கு வாய்ஸ் கொடுத்த விஜய் சேதுபதி!
June 27, 2017
சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வேல்மதி இயக்கத்தில் விரைவில் வெளிவரப்போகும் திரைப்படம் 'அண்டாவ காணோம்'.
'திமிரு' படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்ற ஸ்ரேயா ரெட்டி, ஒன்பது ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர், சில நாள்களுக்கு முன்புதான் வெளியானது. நேற்று, இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தில், அண்டா பேசும் காட்சிகளுக்கு அண்டாவாக விஜய் சேதுபதி பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். பி.வி.சங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, அஸ்வமித்ரா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அடுத்த மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments