சூர்யாவிடம் வந்து நின்ற இறுதிச்சுற்று!

பெண் இயக்குனர்கள் என்றாலே, ஒரு அழுகாச்சி கதையோடு வந்து தியேட்டரையும் கண்ணீரில் மிதக்கவிட்டு அடுத்த படம் கிடைக்காமல் தானும் கண்ணீரில் மிதப்ப...

பெண் இயக்குனர்கள் என்றாலே, ஒரு அழுகாச்சி கதையோடு வந்து தியேட்டரையும் கண்ணீரில் மிதக்கவிட்டு அடுத்த படம் கிடைக்காமல் தானும் கண்ணீரில் மிதப்பார்கள் என்கிற பழைய பதிவேடுகளை, புதிய நடைமேடைகளாக மாற்றியவர் சுதா கொங்கரா. அவரது ‘இறுதிச்சுற்று’ படத்தை ஒரு ஆண் இயக்கியிருந்தால் கூட அப்படியொரு பினிஷிங் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!

அப்படியொரு திடுக்கிடும் வெற்றியை தமிழ்சினிமாவில் அள்ளிக் கொடுத்த சுதாவுக்கே, அடுத்தடுத்த படங்களில் அவ்வளவு குழப்பம். இறுதி சுற்றை முடித்துவிட்டு இரண்டாவது சுற்றுக்காக சென்னை வந்திறங்கிய அவருக்கு, தன் கதையை யாரிடம் சொல்லி கால்ஷீட் பெறுவது என்பதில் ஏகப்பட்ட தயக்கம். குழப்பம். முதலில் விஜய் சேதுபதியை சந்தித்து கதை சொன்னார். என்ன குழப்பமோ, அதற்கப்புறம் அவர் போன இடம் சிவகார்த்தியேன் ஆபிஸ். அங்கும் கதை சொல்லி அசத்தியவருக்கு ஏனோ, விழுந்தது ரெட் சிக்னல்.

தற்போது சுதாவை “வாங்கம்மா வாத்தியாரம்மா” என்று வரவேற்று உபசரித்த இடம் சூர்யாவின் இல்லம் என்கிறார்கள். அநேகமாக சுதாவின் அடுத்தப்பட ஹீரோ சூர்யாதான் என்று முடிவாகியிருக்கிறதாம். இந்தப்படத்தை தனது சொந்த கம்பெனியான 2 டி பேனரிலேயே தயாரிக்கிறாராம் சூர்யா.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About