சினிமா
நிகழ்வுகள்
தரையில் கால் படாமல் ஆட்டம் ஆடிய சிம்பு
June 13, 2017
சிம்பு நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். சிம்பு 4 கெட்டப்புகளில் நடித்து வரும் இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சானாகான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
யுவன் இசையமைக்கும் இப்படத்தில் வைரமுத்து வரிகளில் ‘இரத்தமே ரத்தம்’ என்ற பெயரில் ஒரு பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடலை சிம்புவே பாடியுள்ளார். முழுக்க முழுக்க ரசிகர்களை மையப்படுத்தியே உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடலை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.
இந்த பாடலில்

சிம்புவின் கால் தரையில் படாத அளவுக்கு அவரது ரசிகர்கள் அனைவரும் தங்கள் தோளிலேயே நிற்க வைத்து அவர் ஆடுவது போல் படமாக்கியுள்ளனர். இந்த பாடலுக்கு ராபர்ட் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். அவர்தான் இந்த தகவலை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் சிம்பு நடிக்கும் மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா ஆகிய கெட்டப்புகளுக்கான போட்டோக்கள் வெளியாகிவிட்டன. மீதி 2 கெட்டப்புகளை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். அதேபோல், இப்படத்தை இரண்டு பாகமாகவும் திரையிடவுள்ளனர். அதன்படி, முதல்பாகம் வருகிற ரம்ஜான் தினத்தையொட்டி ஜுன் 23-ந் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

0 comments