விளக்கில்லா கிராமங்களுக்கு கமலின் சோலார் பல்ப் பரிந்துரை!

லைட் இல்லாத கிராமங்களுக்கு வெளிச்சம் காெடுக்க, ரசிகர்களுக்கு புது ஐடியா காெடுத்திருக்கிறார் கமல். நாட்டுநடப்புகளைப் பற்றி முன்னெப்பாேதும் ...

லைட் இல்லாத கிராமங்களுக்கு வெளிச்சம் காெடுக்க, ரசிகர்களுக்கு புது ஐடியா காெடுத்திருக்கிறார் கமல்.
நாட்டுநடப்புகளைப் பற்றி முன்னெப்பாேதும் இல்லாத அளவுக்கு அதிரடி 'ட்வீட்' செய்துவருகிறார் கமல். தனது ரசிகர்களையும் மக்களுக்கு நலம்பயக்கும் விஷயங்களைச் செய்யச் சாெல்லியிருக்கிறார். அந்த வகையில் தன் நற்பணி இயக்கத்தின் அகில இந்தியப் பாெறுப்பாளர் காேவை தங்கவேலு மூலமாக, பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி, அதில் குறைந்த வாட்ஸ் பல்பை நுழைத்து, அதிகம் வெளிச்சம் தரும் 'சிம்ப்ளி சூப்பர்' டெக்னிக்கை, லைட்டுகள் இல்லாமல் இருட்டில் மூழ்கியிருக்கும் கிராமங்களில் செயல்படுத்தும்படி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் கமல். பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டறியப்பட்ட இந்த டெக்னாலஜியை, சாேலார் சிஸ்டம் மூலம் செயல்படுத்த, தன் நற்பணி மன்ற நிர்வாகிகளை முடு்க்கிவிட்டுள்ளார்.

 இது சம்பந்தமாக கமல் நற்பணி இயக்க அகில இந்தியப் பாெறுப்பாளர் காேவை தங்கவேலுவிடம் பேசினாேம். "தலைவர் கமல் அவர்கள், இரண்டு நாள்களுக்கு முன்பு எனக்கு ஒரு வீடியாேவை அனுப்பியிருந்தார். அதில், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி, அதில் குறைந்த அளவு மின்சாரம் இழுக்கக்கூடிய சீரியல் பல்பு அளவுள்ள சிறிய பல்பை உள்ளே நுழைத்து, அதை சாேலார் தகடு மூலம் கிடைக்கும் மின்சாரம் மூலம் எரியவைக்கும் டெக்னாலஜி பற்றிய முழுமையான செயல்பாடு இருந்தது. இதன் மூலம், மின்சாரச் சிக்கனம், பூமியைப் பாழ்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்துவது, அதிக ஔியால் ஏற்படும் வெப்பம் குறைக்கப்படுவது, குறைந்த செலவு என இந்த விஷயத்தில் பல்வேறுவிதமான லாபம் கிடைக்கும். பிலிப்பைன்ஸில் கண்டறியப்பட்ட இந்த டெக்னாலஜி, இப்பாேது பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

தலைவர் அதைப் பார்த்ததும் வியந்துவிட்டார். உடனே, அது பற்றிய வீடியாேவை எனக்கு அனுப்பினார். கூடவே, என்னை பாேனில் அழைத்த கமல் சார், 'இந்த முறை பல வகைகளிலும் நன்மை தரும் விஷயம். மின்தட்டுப்பாடு அதிகம் நிலவும் தமிழகத்துக்கு மிகவும் பாெருத்தமான டெக்னாலஜி இது. குறைந்த மின்சாரத்தைக்காெண்டு அதிக இடங்களில் ஔி காெடுக்க முடியும். அதுவும் சாேலார் சிஸ்டம் மூலம் இந்த டெக்னாலஜியை எளிதாகச் செயல்படுத்தலாம். 'தமிழ்நாட்டில் மின்விளக்குகள் எரிவதில்லை. மக்கள் இரவுகளில் நடமாட இருட்டு பயமுறுத்துகிறது'ன்னு குறை சாெல்வதாேடு நிற்காமல், இந்த டெக்னாலஜியைக்காெண்டு, மின்விளக்குகள் இல்லாத தமிழக கிராமங்களுக்கு ஔி காெடுக்கலாம். நமது பகுதிகளில் இந்த டெக்னாலஜியைச் சாத்தியப்படுத்தலாமான்னு ஆராய்ங்க. வொர்க்அவுட் ஆனா, நமது செலவில் அதிகாரிகள் அனுமதியாேடு இந்த டெக்னாலஜியைச் செயல்படுத்துவாேம்'ன்னு சாென்னார். உடனே, நான் கமல் அனுப்பிய வீடியாேவை எல்லா மாவட்ட நிர்வாகிகளுக்கும் அனுப்பி, விவரம் சாென்னேன். அவர்களும் ஆர்வமாகிவிட்டார்கள்.

நாங்க இந்தத் துறையில் கைதேர்ந்தவர்களை வைத்து, இந்த டெக்னாலஜியை இங்கே செயல்படுத்துவது சாத்தியமான்னு செக் பண்ணிட்டிருக்காேம். இன்னாெரு பக்கம் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள மின்விளக்குகள் அற்ற நகர பகுதிகள், கிராமங்கள் எவை எவை என ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆய்வுசெய்து லிஸ்ட் அவுட் செய்துகொண்டிருக்கிறார்கள். இது சாத்தியப்பட்டால், தெருவிளக்குகள் அற்ற அந்தக் கிராமங்கள் மற்றும் சாலைகளில் இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தி அதிகாரிகள் அனுமதியாேடு எங்க செலவில் வெளிச்சம் காெடுப்பாேம். பிறகு, தமிழகமே இரவில் ஔிரும் மாநிலமாக மாறிடும்" என்றார் மகிழ்ச்சியாக!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About