“ ‘பிக் பாஸ்’ போட்டியாளர்கள் அத்தனை பேரும் நடிக்கிறாங்க” - ‘மாப்பிள்ளை’ கமல் பேட்டி
July 16, 2017
“சில வருஷங்களுக்கு முன்னாடி காலையில 8 மணிக்கு `மதுரையே என் குரலைக் கேட்டுத்தான் விடியும்'. அப்போ `Talk of the Town' எதுவா இருந்தாலும், அதை ரேடியோவில் பேசுவேன். ரேடியோவுல ஆரம்பிச்ச பயணம் இப்போ `மாப்பிள்ளை' சீரியல்ல வந்து நிக்குது" - `ரேடியோ ஜாக்கி' டோனில் பேசுகிறார் கமல் என்கிற கமல்ஹாசன்.
“அப்போ சீரியல் தவிர அரசியல், சினிமா, சமூகப் பிரச்னைனு எல்லாத்தைப் பற்றியும் உங்ககிட்ட பேசலாம்போல."
“தாராளமா... நான் ரெடி, கேள்வி கேட்க நீங்க ரெடியா?"ன்னு அசுரவேகத்துல பதில் வரவே, `பிக் பாஸ்' முதல் ஜிஎஸ்டி வரை `மாப்பிள்ளை' கமலுடன் ஒரு ஜாலி டாக்!
“சின்னத்திரைக்கு வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டிருந்தீங்க?"
“ம்ம்ம்ம்ம்.. காலேஜ் சமயத்துல நான் ரொம்ப நீளமா முடி வளர்த்திருந்தேன். அது ‘அந்நியன்’ படம் ரிலீஸ் ஆன நேரமும்கூட. அப்போ எல்லாரும் `மச்சான்... நீ `ரெமோ' மாதிரி இருக்கடா. நீயெல்லாம் விஜே-வுக்கு ட்ரை பண்ணா, செம சான்ஸ் கிடைக்கும்'னு உசுப்பேத்திவிட்டாங்க. நானும் ட்ரை பண்ணேன். வாய்ப்பு கிடைச்சது. என்னோட முதல் ஷோவே `அந்நியன்' கான்செப்ட்தான். ஊரு முழுக்க `அந்நியன் அவதரிக்கிறான்'ன்னு போஸ்டர் ஒட்டியிருந்தாங்க. எனக்கு அப்போ தெரியாது, நான்தான் அந்த அந்நியன்னு. சேனலுக்குப் போன அப்புறம் `அந்நியன்' மாதிரி ஷோ பண்ணச் சொன்னாங்க. கொஞ்சகாலம் இப்படித்தான் காமெடியா போச்சு. அப்புறம் தொழில் தொடங்கலாம்னு முடிவெடுத்து, பனியன் வியாபாரத்துக்கான ஆரம்ப வேலைகள் எல்லாம் ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துலதான் என்னோட நண்பன் ஒருத்தன் `நீதான் இவ்வளவு வாய் பேசுறியே... பேசாம எல்ஐசி ஏஜென்ட் ஆகிடு'ன்னு சொன்னான். நானும் கண்ணை மூடிக்கிட்டு ஓகே சொல்லிட்டேன். ஒவ்வொரு வீட்டுக் கதவைத் தட்டும்போதும், `தம்பி... நீங்க லோக்கல் சேனல்ல வர்ற அந்நியன்தானே?'ன்னு கலாய்ப்பாங்க."
“அப்போ ரேடியோ மிர்ச்சி பயணம்...”
“அதுவா... நியூஸ்பேப்பர்ல விளம்பரம் பார்த்து மதுரை மிர்ச்சி இன்டர்வியூக்குப் போனேன். அங்கே போன உடனே `உன் பேர் என்ன?'னு கேட்டாங்க. `கமல்ஹாசன்'னு சொன்னேன். உடனே `ஓய்ய்ய்ய்... கலாய்க்காதீங்க'ன்னு சொன்னாங்க. `நிஜம்மா என் பேரு அதாங்க'ன்னு சொன்னேன். உடனே `கமல் மாதிரி என்ன பண்ணுவீங்க?'னு கேட்டாங்க. `அவரு மாதிரி நல்லா அழுவேன்'னு சொன்னதும், பொசுக்குன்னு `எங்க... அழுதுகாட்டு'ன்னு கேட்டாங்க. நானும் `குணா' படத்துல வர்ற அபிராமி டயலாக்கைப் பேசி நடிச்சுக் காட்டினேன். `நடிச்சது போதும் வெளியே போ'ன்னு சொல்லிட்டாங்க. தவிர, நான் பேசுறதே ஏலேய்... இங்கே வாலேங்கிற எங்க ஊரு பாஷைதான். `அவசரப்பட்டு ஊர்ல பேசுற மாதிரி பேசிட்டோமா'ன்னு வருத்தப்பட்ட நேரத்துல மறுபடியும் என்னைக் கூப்பிட்டு, `எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்குறீங்க?'ன்னு கேட்டாங்க. எனக்கு ஒரு நிமிஷம் பயங்கர ஷாக். `சார்... இப்போ நான் 6,000 ரூபாய் வாங்குறேன். 2,500 ரூபாய் அதிகமா போட்டு 8,500 ரூபாயா கொடுங்க சார்'ன்னு கேட்டதும், அங்கே இருந்தவங்க எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. கூடவே `உங்களுக்குச் சம்பளம் 15,000 ரூபாய்'னு சொன்னாங்க. அப்புறம்தான் ஆரம்பிச்சது பயணமே. ஐ மீன் என்னோட முதல் விமானப் பயணம்."
“எது... தூத்துக்குடி டு சென்னையா?"
“இல்லைங்க... என்னோடு செலெக்ட் ஆன எல்லாருக்கும் அகமதாபாத்ல ஆர்.ஜே ட்ரெய்னிங். ஆர்.ஜே பாலாஜி, ம.கா.பா. ஆனந்த், மிர்ச்சி செந்தில், மிர்ச்சி சிவா, சுசித்ரா எல்லாரும் சென்னை டு அகமதாபாத் ஃப்ளைட்ல போனோம். இதுல செந்தில், சுசித்ரா, சிவா இவங்க எல்லாரும் சீனியர் ஆர்ஜேஸ். இங்கேதான் எனக்கும் ஆர்.ஜே பாலாஜிக்கும் பெரிய சண்டை வந்துச்சு. ஒரு விண்டோ சீட்டுக்காக ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டோம். கடைசியில `நீயும் உக்கார வேணாம்... அவனும் உக்கார வேணாம்'ன்னு அந்த சீட்ல ம.கா.பா வந்து உட்காந்துட்டார். `நீ உக்கார் மச்சான்... ஆனா, இந்த பாலாஜி மட்டும் உட்காரக் கூடாது'ன்னு சொல்ல, பயங்கரத் தகராறு. அப்புறம் ஒருவழியா சமாதானம் ஆகிட்டோம். அதை இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது."
“சின்னத்திரை என்ட்ரி எப்படி?”
“ஒரு வருஷம் கழிச்சு என்னை ரேடியோ மிர்ச்சி வேலையிலிருந்து தூக்கிட்டாங்க. சூரியன் FM-ல சேர்ந்தேன். அப்போதான் `திருமுருகன்' சாரோட அறிமுகம் கிடைச்சது. சீரியல் ஆடிஷன் வெச்சப்போ என்னோட நடிப்பு அவருக்குப் பிடிச்சிருந்தது. அப்போ நாசர் சார்தான் கூத்துப்பட்டறைப் பயிற்சியாளர்களைக் கூட்டிட்டு வந்து நடிப்பு சொல்லிக்குடுத்தார். அப்போகூட எனக்கு சரியா நடிப்பு வரலை. `இந்தப் பையனைத் தேத்த முடியாது'ன்னு மௌலி சாரும், பாஸ்கர் சாரும் சொன்ன பிறகும்கூட திருமுருகன் சார் அதை ஏத்துக்கலை. என்மேல நம்பிக்கை வெச்சு சீரியல்ல நடிக்கக் கூப்பிட்டார். ஆனா, என்னோட நடிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததுனால, எதுவுமே கைகூடி வரலை. இருந்தாலும் எனக்கு ஒரு வருஷமா சம்பளம் கொடுத்து சும்மா வேலைக்கு வெச்சிருந்தார் திருமுருகன். `என்னை நம்பி வேலையை விட்டுட்டு வந்திருக்க. நீ நடிக்கலைன்னாலும் சம்பளம் கரெக்ட்டா வந்திரும்'ன்னு சொன்னார். ஒரு வருஷமா நான் அவரோட ஆபீஸ்ல சும்மாதான் இருந்தேன். அப்புறமாத்தான் நடிக்க ஆரம்பிச்சேன்."
“செந்தில்-ஶ்ரீஜாவோடு நடித்த அனுபவம்..."
“செந்தில் சார் என்னோட அண்ணன் மாதிரி. இண்டஸ்ட்ரியில இருக்கிற ஒரே நண்பர் அவர்தான். அவரைப் பார்த்துத்தான் லவ் பண்ண கத்துக்கிட்டேன். அவங்க ஶ்ரீஜா அக்காவைக் கவனிச்சுக்கிற விதம் வேற லெவல்."
“ `மாப்பிள்ளை' சீரியல்ல முத்தக் காட்சிகள் வருதே..."
“ஆமாங்க... ஜனனி எனக்கு கன்னத்துல முத்தம் குடுக்கணும்'கிறதுதான் கான்செப்ட். அது கதைக்குத் தேவையான காட்சிதான். அப்போ ஜனனி நிஜமாவே எனக்கு கன்னத்துல முத்தம் குடுத்துட்டாங்க. அங்கே இருந்த எல்லாரும் `நடிக்கிறப்போ இப்படியெல்லாம் முத்தம் கொடுக்க மாட்டாங்க. சும்மா பக்கத்துல வந்துட்டுப் போயிடுவாங்க'ன்னு சொன்னதும் `எனக்கு அதெல்லாம் தெரியாது. இது வெறும் நடிப்புதானே'ன்னு சொன்னாங்க ஜனனி. யூடியூப்ல `ஜனனி - கமல் கிஸ்ஸிங் சீன்'னு போட்டு பரப்பிவிட்டுப் படாதபாடு படுத்தீட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் அதை நினைச்சு நினைச்சு சிரிச்சுப்போம்."
“உங்களை `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டா போவீங்களா?"
“கமல் சாருக்காகவே போயிருப்பேன். கமல் சாரை நேர்ல பார்த்திருக்கேன். ஆனா, இதுவரை பேசியதில்லை. அவர் என்னைப் பார்த்து `உன் பேர் என்ன?'ன்னு கேட்கணும். அப்போ நான் `கமல்ஹாசன்'னு சொல்லணும். அந்த ஒரு தருணத்துக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன். `பிக் பாஸ்'ல கலந்துக்கிட்டா உண்மையா இருப்பேன். அப்போதான் நேயர்கள் என்னை ஏத்துக்குவாங்க. நான் பேரு வாங்கணும்னு நடிச்சா யாருமே ஏத்துக்க மாட்டாங்க. `வெளியே இருக்கிற மனுஷங்களைவிட காட்டுல இருக்கிற விலங்குகளே மேல்'னு சொல்வோம்ல அதுக்கு சரியான உதாரணம் `பிக் பாஸ்'தான். நீங்களே சொல்லுங்க, அங்கே உள்ள இருக்கிற யார்தான் உண்மையா இருக்கா?
“ ‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் யார்தான் உண்மையா இருக்காங்க?"
“எல்லாருமே நடிக்கத்தான் செய்றாங்க. எல்லாரும் ஒருத்தரை அடிச்சு இன்னொருத்தர் எப்படி முன்னுக்கு வர்றதுன்னு நினைக்கிறவங்கதான். அங்கே கேமரா மட்டும்தான் உண்மையா இருக்கு."
“நீங்க பெரியாரைப் பின்பற்றுபவர்னு கேள்விப்பட்டோம்..."
“நான் அவரோட புத்தகங்கள் படிப்பேன். `தி.க'ன்னு சொல்றாங்களே அப்டீன்னா என்ன? கமல் சார் ஏன் தந்தை பெரியாரைப் பின்பற்றுகிறார்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டேன். அவ்வளவுதான்.''
“நீங்க கமல் சாரோட ஃபேன். அவர் இப்போ சர்ச்சையில் சிக்கியத்தைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?”
“ ‘கமல் நல்ல நடிகரா... இல்லை நல்ல மனிதரா?'னு கேட்டா... நான் `நல்ல நடிகர்'னுதான் சொல்வேன். கமல் சாரைப் பார்த்து வளர்ந்த எனக்கு, அவர் என்ன சொன்னாலும் சரிதான். ஒரு நடிகர் என்ன செஞ்சாலும் அதை ஃபாலோ பண்ண நாலு பேரு இருப்பாங்க. அதுவே கமல் சார்னா எக்கச்சக்க ரசிகர்கள். அதனால அவரை வெச்சு தப்பான விஷயங்களை இந்தச் சமூகத்துக்குச் சொல்லிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். தவிர, அரசியலும் சினிமாவும் வேற வேற இல்லை. அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம் வரைக்கும் ரெண்டுலயுமே ஒரே ஆள்கள்தான் இருக்காங்க. `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நமீதா `கோக கோலா' வேணும்னு கேட்டு குடிக்கிறாங்க. அப்போ ஜல்லிக்கட்டுல கோக கோலாவைத் தடைசெய்யணும்னு கோஷம் போட்ட ஜூலி சும்மாதான் இருந்தாங்க. இந்த நிகழ்ச்சியைப் பற்றி மக்கள் குற்றம் கண்டுபிடிக்கிறதுல தப்பே இல்லை. அரசியல்வாதி, சினிமாக்காரன், போலீஸ்காரன் எல்லாரும் வீட்டைவிட்டு வெளியே வந்தா பொதுச் சொத்துதான். அவங்க எல்லாரும் மக்கள் விமர்சனங்களைக் கேட்டுத்தான் ஆகணும். அதனால கமல் சாரும், அதுல இருக்கிற மற்ற பிரபலங்களும் மக்கள் கருத்தைக் கேட்டுத்தான் ஆகணும். கல்லடி கொடுத்தாலும் சரி, பூமாலை போட்டு வரவேற்றாலும் சரி, ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். கமல் சார் இதெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்க மாட்டார்னு நினைக்கிறேன். ஏன்னா... எந்த நடிகருக்குத்தான் `நான் ஜெயிலுக்குப் போறதைப் பற்றிக் கவலைப்படலை'ன்னு சொல்ற தில்லு வரும்?"
“ஜி.எஸ்.டி பிரச்னையால் சின்னத்திரையில் என்னவெல்லாம் பாதிப்பு வந்திருக்கு?"
“முன்னாடி சம்பளத்தைக் கையில கொடுத்தாங்க. இப்போ அக்கவுன்ட்ல போடுறாங்க. அதாங்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு. மற்றபடி ஜி.எஸ்.டி நாட்டுக்கு நிச்சயத் தேவை. வரி கட்டுறதுல இருந்து, சினிமாக்காரங்க இனி தப்பிக்கவே முடியாது" என்று சிரித்தபடி முடித்த கமல், நன்னன் எழுதிய `பெரியார் பதிற்றுப் பத்து' புத்தகத்தைக் கையில் கொடுத்து வழியனுப்பிவைத்தார்.

0 comments