'நாமினேஷன்னா என்னங்கய்யா?' - பிக் பாஸின் வைரல் வார்த்தைகள்!

         வீ டுகளில், அலுவலகங்களில், திருமண மண்டபங்களில்... ஏன் மருத்துவமனைகளில் கூட பிக் பாஸ் புராணம்தான். அரசியல் பேசும் இடமான டீக்கடைகூட ...

         வீடுகளில், அலுவலகங்களில், திருமண மண்டபங்களில்... ஏன் மருத்துவமனைகளில் கூட பிக் பாஸ் புராணம்தான். அரசியல் பேசும் இடமான டீக்கடைகூட இப்போது பிக் பாஸ் பாலைத்தான் காய்ச்சிக்கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தாலும் அது தமிழ்நாடு முழுக்க விவாதிக்கப்படுவதற்கு இந்த ரீச்தான் காரணம். அப்படி இந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டு சோஷியல் மீடியாக்களில் வைரலான, விமர்சனத்துக்குள்ளான வார்த்தைகள் இவை!

'நாமினேஷன்னா என்னங்கய்யா?:

             இதுவரை நடந்த மொத்த எபிசோட்களிலும் அதிகம் ஹிட்டடித்த வார்த்தை இதுதான். கன்ஃபெஷன் ரூமில் கஞ்சா கருப்பு பிக் பாஸ் குரலிடம், 'நாமினேஷன்னா என்னங்கய்யா?' எனக் கை கட்டி கேட்பார். அவ்வளவுதான். மறுநாள் முதல் பறந்தன மீம்ஸ். 'அப்ரைசல்ன்னா என்னங்கய்யா?' என ஐ.டி பாய்ஸும், 'புராஜெக்ட்ன்னா என்னங்கய்யா?' என காலேஜ் பசங்களும் அடித்த லூட்டியில் சோஷியல் மீடியா மொத்தமுமே லகலகலக தான்.

க்ரீன் டீ வித் ஜிஞ்சர் கார்டமம்:

             ஓவியா வந்த முதல் நாளிலேயே 'எனக்கு க்ரீன் டீ கொடு' என கேமராவைப் பார்த்து கெஞ்சத் தொடங்கிவிட்டார். அதற்கடுத்த வாரம் நமீதா, 'எனிக்கு ஜிஞ்சர் கார்டமம் வேணும்' எனக் கேட்க, அதை தமிழில் கஞ்சா கருப்பு விளக்க, தமிழ் சிக்கி சின்னாபின்னமானது. இப்போது வரும் ட்ரோல் வீடியோக்களில் இந்த டயலாக்தான் பிரதானம்.

ஃபேக்கு ஃபேக்கு:

              ஆர்த்தி சினிமாவில் பேசிய வசனங்கள் ஹிட்டானதோ இல்லையோ, பிக் பாஸ் வீட்டில் ஜூலியைப் பார்த்து 'ஃபேக்கு ஃபேக்கு' என சொல்லும் பன்ச்சுக்கு ஆக்ரோஷ வரவேற்பு. பாவம், பாரபட்சம் எல்லாம் பார்க்காமல் திட்டிக் குவிக்கிறார்கள் நெட்டிசன்கள். 'என் தங்கச்சியா இருக்குறதுக்கும் ஒரு தகுதி வேணும்' என அடுத்த நாள் போறபோக்கில் சொல்ல, இன்னும் உக்கிரமாகிவிட்டார்கள் மீம் க்ரியேட்டர்கள்.

40 பேருக்கு சோறு போட்டோம்:

               சக்தி நடித்ததுதான் சின்னத்தம்பியில். ஃபீல் செய்வது நாட்டாமை சரத்குமார் ரேஞ்சில். முதல் வாரம் முழுக்க, 'நாப்பது பேருக்கு சோறு போட்டோம், நாப்பது பேருக்கு வெஞ்சனம் வச்சோம்' என்றே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். அதுக்கும் ஷோவுக்கும் கடைசி வரை என்ன சம்பந்தம்னு சொல்லவே இல்லையே சின்னத்தம்பியண்ணே?

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர்:

                 இந்த வசனத்தைக் கேட்ட தமிழறிஞர்கள் எல்லாருக்கும் பி.பி, சுகர் உள்ளிட்ட பத்துவகையான ப்ராப்ளங்கள் வந்திருக்கும். தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வைத்த புண்ணியத்திற்கு அதை எழுதியவர் தாயுமானவர் என சீரியஸாகவே சொல்லி சிரிக்க வைத்தார் ஜுலி. நீங்க தப்பா சொன்னதைக் கூட பொறுத்துக்கலாம். ஆனா அதுக்கு ஏதோ கோல்டு மெடல் வாங்குனமாதிரி விட்ட அந்த லுக்கைத்தான்...!

வெஷம்:


                 ஷோவில் காயத்ரி என்ன சொன்னாலும் அது வைரல், சர்ச்சை ஆகிறது. 'எச்சைங்க, சேரி பிஹேவியர்' போன்ற சொற்களுக்கு எதிராக கொதித்தெழுந்து வழக்குகள் வரை போய்விட்டார்கள். அடுத்தபடியாக அவர் உதிர்த்த முத்து - 'வெஷம்'. அதற்கு அவர் கொடுத்த ரியாக்‌ஷன்தான் வார்த்தைகளை விட பெரிய ஹிட்டு. வார்த்தைக்கு வார்த்தை வெஷத்தை கக்கிட்டு மத்தவங்களை வெஷம்னு சொல்றது என்ன லாஜிக் சர் ஜி?

பரணிப் பயதாங்க காரணம்:

                'வீட்டுக்குழாய்ல தண்ணி வரலையாம். அதுக்கு என்னையப் போட்டு அடிக்கிறாங்கய்யா' - கஞ்சா கருப்பு பேமஸ் ஆனதே இந்த வசனத்தைப் பேசித்தான். பழசை மறக்காமல் அதையே பிக் பாஸிலும் பேசிக்கொண்டிருந்தார். சோறு சரியா வேகலையா? என்னது மழை பெய்யுதா? இந்தப் பரணிப்பய தாங்க காரணம்' என சொல்லிச் சொல்லியே பாவம் எலிமினேட்டும் ஆகிவிட்டார்.

கொக்கு நெட்ட கொக்கு:


                 பிக் பாஸ் செட்டின் யோகி பி, ப்ளாஸி, லேடி காஷ் எல்லாமே ஓவியாதான். டங் ட்விஸ்டர் சுற்றில் 'கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட' என்பதை ராப் ஸ்டைலில் அவர் பாடியதைக் கேட்க காது கோடி வேண்டுமய்யா! சும்மாவே திடீர் ஓவியா ரசிகர்கள் எகிறி எகிறி ஓட்டுப் போடுகிறார்கள். இப்போது கேட்கவும் வேண்டுமா என்ன?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About