நாளை பிறக்கிறது அற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்!

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். ஏனெனில், இந்த மாதத்தில் அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி பீட...

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். ஏனெனில், இந்த மாதத்தில் அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி பீடங்களிலும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாக்களுடன் விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். மேலும், அம்மன் கோயில்களில் அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல்... என பக்தர்கள்  விதவிதமான நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுவார்கள். முக்கியமாக, கோயில்களிலும் வீடுகளிலும் கூழ் ஊற்றுதல் போன்றவையும் நடக்கும்.

இம்மாதத்தில் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு சிறப்பான நாள்களாக கருத்தப்படுகிறது. இது, தவிர, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பல விசேஷ நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. இதில், ஆடி அமாவாசை வருகிற (ஜூலை) 23-ம் தேதி வருகிறது.  அன்றைய தினத்தில் கடல், நதிகள் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.  ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வருகிறது. அதேபோல, ஆடிப்பூரம் ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரம். திருமண பாக்யம் கைகூடாமல் இருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் வழிபடுவார்கள். சிவன் கோவில்களிலும் ஆடிப் பூரம் அன்று அம்பாளுக்கு சிறப்பான வழிபாடுகள் நடக்கும். இத்தனை அற்புதங்கள் கொண்ட ஆடி மாதம் நாளை தொடங்குகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive