அனுபவம்
நிகழ்வுகள்
விரைவில் இ-வாலட் சேவை- முதலீட்டை அதிகரிக்கும் அமேசான் பே நிறுவனம்!
July 13, 2017
அமேசான் தன்னுடைய விற்பனை வர்த்தகத்தைப் பல்வேறு வடிவங்களில் விரிவுபடுத்தி வருகிறது. இதற்காகப் பெரிய அளவில் முதலீடும் செய்து வருகிறது. இணையவழி பணப்பரிமாற்றத்தில் பேடிஎம் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க அமேசான் பே இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட அமேசான் கார்ப்பரேட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும், மொரீஷியஸில் பதிவு செய்யப்பட்ட அமேசான் டாட் காம் நிறுவனமும் 130 கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறது.
புதிய முதலீட்டின் மூலம் இ-வாலட் சேவையை விரிவுபடுத்தவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்து இருக்கிறது அமேசான் நிறுவனம். கடந்த ஏப்ரல் மாதத்தில் அமேசான் நிறுவனம் ரிசர்வ் வங்கியிடம் இ-வாலட் சேவையை அறிமுகப்படுத்த அனுமதி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான்
இதுவரை அமேசான் பே நிறுவனத்தில் 220 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. 'புதியதாக முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகையானது பேமென்ட் பிஸினஸ்காக மட்டும் பயன்படுத்தப்படும்' என்று தெரிவித்து இருக்கிறார்கள் அமேசான் நிறுவனத்தின் அதிகாரிகள். 'நாங்கள் இந்தியாவில் நீண்ட கால அடிப்படையிலேயே முதலீடு செய்து வருகிறோம். இந்திய வாடிக்கையாளர்கள் இ-காமர்ஸ் சந்தையில் பொருள்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கட்டமைப்பையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தத் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது' என்கிறார் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெஃப் பெஸோஸ்.
அமேசான் இணையதளத்தில் பொருள்களை வாங்குபவர்கள் அமேசான் பே சேவையைப் பயன்படுத்தினால் விலையில் தள்ளுபடியும் கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறார்கள்.

0 comments