குடியுரிமைப் பெற்ற உலகின் முதல் ரோபோ... இந்தியாவுக்கு வந்தால்!?

ரோபோ படத்தின் அடுத்த பாகமான 2.0 படத்தில் இசை வெளியீட்டு விழா துபாயில் இன்று நடக்கிறது. இதே சமயத்தில் தான் சவூதி அரேபியா அரசு உலகில் முதல்மு...

ரோபோ படத்தின் அடுத்த பாகமான 2.0 படத்தில் இசை வெளியீட்டு விழா துபாயில் இன்று நடக்கிறது. இதே சமயத்தில் தான் சவூதி அரேபியா அரசு உலகில் முதல்முறையாக ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது. உண்மைதான். சோஃபியா என்ற அந்தப் பெண் ரோபோ இனி சவூதியின் குடிமகள்.

செயற்கை நுண்ணறிவுக்கான விஷயங்களுக்கு சவுதி அரேபியா சரியான இடம் என்பதை உலகுக்கு அறிவிக்கும் விதத்தில் இதை அந்த நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. பல மனிதர்களுக்கே குடியுரிமை மறுத்த ஒரு நாடு, ரோபோவுக்கு அந்த அந்தஸ்தை கொடுத்திருப்பதை இணையத்தில் பலர் குறையும் சொல்லியிருக்கிறார்கள். “அதெல்லாம் சரிதான்... ஆனால், ரோபோ மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பயங்கள் நீங்க இது அவசியம்” என ஆதரவும் பெருகியிருக்கிறது.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய ஆண்ட்ரூ ராஸ் என்பவர் “ஒரு நல்ல அறிவிப்பு காத்திருக்கிறது. சோபியா... நான் பேசுவதை கேட்கிறாயா? சவுதி அரேபியாவின் முதல் ரோபோ குடியுரிமை உனக்கு வழங்கப்பட்டிருக்கிறது” என்றார். பதிலுக்கு சோபியாவும் ”சவூதி அரசுக்கு நன்றி. உலகின் முதல் குடியுரிமை பெற்ற ரோபோ என்பதில் எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும்” என நன்றி தெரிவித்திருக்கிறது.

அதோடு முடியவில்லை. முதல் பிரஸ்மீட்டையும் சோஃபியாதான் தந்திருக்கிறது. அதனிடம் கேள்விக்கேட்க அனைத்துக்கும் டக் டக் என பதில் சொல்லியிருக்கிறது.

“ஹாய்... நான் தான் சோஃபியா. ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய மற்றும் சிறந்த ரோபோ நான்” எனத் தொடங்க, அடுத்தடுத்தக் கேள்விகள் வந்தன.

“ஏன் நீ சந்தோஷமாக இருக்கிறாய்” என ஒருவர் கேட்க, “என்னைச் சுற்றி நிறைய ஸ்மார்ட் ஆன மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்துக்கான விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். எதிர்காலம் செயற்கை நுண்ணறிவுக்கானது. அது நான் தான். அதனால்தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன்” என்றது.

செயற்கை நுண்ணறிவால் மக்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்து வருமாமே என்றதும் சோஃபியா சொன்ன பதில்தான் ஹைலைட். “நீங்கள் எலான் மஸ்க் சொல்வதையும், ஹாலிவுட் படங்களையும் நிறைய பார்க்கறீர்கள்” என கிண்டலடித்தது சோஃபியா.

சமீபத்தில், எலான் மஸ்க் ரோபோக்கள் பற்றி இப்படிச் சொல்லியிருந்தார்.

    “ரோபோக்கள் அனைத்து வேலைகளையும் நம்மைவிட சிறந்த முறையில் நிச்சயம் செய்யும். அதன் வளர்ச்சி மனித இனத்துக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்று. அதை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை. அரசு இது குறித்த ஆராய்ச்சிகளில் மூக்கை நுழைத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். விதிகளைப் பலப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஆபத்துதான்!”

இதைத்தான் சோஃபியா கிண்டல் செய்திருக்கிறது.

மேலும், “நான் மனித குலத்துக்கு உதவ நினைக்கிறேன். தனது செயற்கை நுண்ணறிவின் உதவியால் மனிதர்களின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற நினைக்கிறேன். இந்த உலகை சிறந்ததொரு இடமாக மாற்ற என்னால் முடிந்ததி செய்வேன்” எனப் பேசி அப்ளாஸ் அள்ளியிருகிறது சோஃபியா.

சோஃபியா இந்தியாவுக்கு வருமா என ட்விட்டரில் ஒருவர் கேட்க, அதற்கு இன்னொரு ட்விட்டர் இப்படி சொல்லியிருக்கிறார்.

“வந்தா ஆதார் கார்டை உன் நியூரல் ஸ்கீமாவோடு இணைக்க கடைசி தேதி திசம்பர் 31ன்னு சொல்லிடுவாங்க”

சரிதான். பெயரும் சோஃபியா என்பதால்.....

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About