ஒரே மாதத்தில் சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் ஆயுர்வேத மருந்து!

பெரும்பாலான நோய்கள் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்ளை எடுத்துக் கொண்டால், அவர்கள் உ...

பெரும்பாலான நோய்கள் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்ளை எடுத்துக் கொண்டால், அவர்கள் உண்ணும் உணவில் அதிக கவனமாக இருப்பதோடு, குறிப்பிட்ட சில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை முழுமையாக போக்க முடியாவிட்டாலும், கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். அதிலும் ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது, அது உடலில் குறிப்பிட்ட சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

அதில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப்படியான தாகம் மற்றும் பசி, திடீர் எடை குறைவு, காயங்கள் தாமதமாக குணமாதல், மிகுதியான சோர்வு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இக்கட்டுரையில் ஒரே மாதத்தில் சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் அற்புத ஆயுர்வேத மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

    வெண்டைக்காய் - 1/2 கப் (நறுக்கியது)
    இஞ்சி ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்

வெண்டைக்காயில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏராளமாள அளவில் உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, சர்க்கரை நோயை சரிசெய்ய உதவும்.

இஞ்சியில் உள்ள பாலிஃபீனால்கள், இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.

மிக்ஸியில் வெண்டைக்காய் மற்றும் இஞ்சி சாறு சேர்த்து, அத்துடன் சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டினால் ஜூஸ் தயார்.

இந்த ஜூஸை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்தால், சர்க்கரை நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About