இனிமேல் பாதாமை பச்சையாக தோலோடு சாப்பிடாதீங்க

பாதாமில் விட்டமின் E, B9, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற அரிய வகை தாதுக்கள் மற்றும் விட்டமின்கள், உப்புகள், புரதச்சத்துக்கள் போன்றவை உள்ளது...

பாதாமில் விட்டமின் E, B9, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற அரிய வகை தாதுக்கள் மற்றும் விட்டமின்கள், உப்புகள், புரதச்சத்துக்கள் போன்றவை உள்ளது.

இத்தகைய சத்துக்களை கொண்ட பாதாமை பச்சையாக உண்பதையும், தோலோடு உண்பதையும் தவிர்க்க வேண்டும்.
பாதாமை எப்படி சாப்பிட வேண்டும்?

பாதாமை இரவு முழுவதும் நீரில் நன்கு ஊற வைத்து மறுநாள் காலையில், தண்ணீரை மாற்றி கழுவி விட்டு, மீண்டும் நீரில் உப்பிட்டு ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில், நீரில் ஊறிய பாதாம் பருப்புகள் அனைத்தையும், நிழலில் வைத்து உலர்த்தி, அதிலுள்ள நீர் வற்றி, நன்கு உலர்ந்த பின் வாணலியில் இதமான சூட்டில் வறுத்து எடுக்க வேண்டும்.

அதன் பின் பாதாம் பருப்புகளை சிறிதாக உடைத்து, அதில் சிறிது மிளகுத்தூள் கலந்து, தேவைகேற்ப நெய் அல்லது சுக்குப் பொடி கலந்து சாப்பிட வேண்டும்.
நன்மைகள்

    நம் உடலில் நல்ல கொழுப்புகள் மற்றும் புத்துணர்ச்சி அதிகரிப்பதோடு, நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு ஏற்படாது.

    பாதாம் பருப்புடன் கீரைகள், இஞ்சி மற்றும் பாசிப்பருப்பு, வெந்தயம் போன்ற பருப்பு வகைகளை சேர்த்து சாப்பிட்டு வர நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை குணமாகும்.

    தினமும் இரவில் 10 பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து, காலையில் அதன் தோலை நீக்கி அரைத்து, பால் அல்லது வெந்நீரில் கலந்து குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    மன அழுத்தம், செரிமான பிரச்சனை நீங்கி, உடல் மற்றும் இதயத்தின் ஆரோக்கியம் சீராகும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About