நாச்சியார் வசனம்! பாலா மீது சினிமாக்காரர்களே எரிச்சல்!

பொதுவாக சினிமாக்காரர்கள் வாந்தியெடுத்தால், மற்றவர்களுக்குதான் அருவெறுப்பு. ஆனால் கோடம்பாக்கம் மட்டும் கண்டுகொள்ளாது. அப்படியொன்று நடந்ததாகவ...

பொதுவாக சினிமாக்காரர்கள் வாந்தியெடுத்தால், மற்றவர்களுக்குதான் அருவெறுப்பு. ஆனால் கோடம்பாக்கம் மட்டும் கண்டுகொள்ளாது. அப்படியொன்று நடந்ததாகவே எடுத்துக் கொள்ளாது. ஆனால் பாலாவின் ‘தே…. ’ வசனத்தை அதே சினிமாக்காரர்கள் விமர்சிப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

சென்னையில் ‘அறம்’ பட இயக்குனர் கோபி நயினாருக்கு பாராட்டு விழா நடத்தினார்கள் சில சினிமா இயக்குனர்கள். வசந்தபாலன், ஜனநாதன், தாமிரா போன்ற இயக்குனர்கள் கலந்து கொண்டார்கள். அதில்தான் பாலாவை ஒரு பிடி பிடித்தார் இயக்குனர் தாமிரா. தற்போது சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஆண் தேவதை’ படத்தை இயக்கி வருகிறார் தாமிரா.

“இன்று ஊடங்கள் எல்லாவற்றிலும் கோபிக்கும் பா.ரஞ்சித்துக்கும் இடையிலான மோதல்தான் முக்கிய விஷயமாக எழுதப்படுகிறது. ஆனால் அது தேவையில்லாத விஷயம். ‘அறம்’ பற்றிதான் அதிகம் விவாதிக்கப்பட வேண்டுமே தவிர, வேறு விஷயங்கள் அல்ல. தமிழ்சினிமாவில் எப்பவோ ஒரு முறை வருகிற இந்த மாதிரி படங்களை கொண்டாடுவதை விட்டுவிட்டு, படைப்பாளிகளுக்கு இடையே இருக்கிற பிரச்சனையை பேசினால், நடுவில் யாராவது ஒருவன் உள்ளே நுழைந்து ‘தேவிடியா பயலே’ன்னு வசனம் பேசி நல்ல சினிமாக்களின் போக்கையே மாத்திருவான்” என்றார் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில்.

பாலாவின் கெட்ட போக்குக்கு சினிமாவிலிருந்தே முதல் கல் விழுந்திருக்கிறது. தடவிக் கொடுப்பீங்களோ, தையல் போடுவீங்களோ? அதற்கு முன்னால் தைரியமாக பேசிய தாமிராவை ஒருமுறை பாராட்டி விடலாமே!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About