உலக அழகி மனுஷி சில்லருக்கு யாருடன் நடிக்க ஆசை தெரியுமா?

உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டுள்ள இந்தியாவின் மனுஷி சில்லர், தனக்கு எந்த நடிகரின் திரைப்படத்தில் நடிக்க விருப்பம் என்பதைக் கூறியுள்ளார். ச...

உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டுள்ள இந்தியாவின் மனுஷி சில்லர், தனக்கு எந்த நடிகரின் திரைப்படத்தில் நடிக்க விருப்பம் என்பதைக் கூறியுள்ளார்.

சீனாவின் சான்யா சிட்டியில், நவம்பர் 18-ம் தேதி உலக அழகிப் போட்டி நடைபெற்றது.  அதில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) உலக அழகியாகப் பட்டம் சூட்டப்பட்டார். மருத்துவக் கல்லூரி மாணவியான இவர், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்ஸிகோ நாடுகளின் அழகிகளைத் தோற்கடித்து பட்டம் வென்றார்.  இவர், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமாகிவருகிறார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மனுஷி சில்லர், தனக்கு எந்த நடிகரின் படத்தில் நடிக்கப் பிடிக்கும் என்பதுகுறித்து மனம்திறந்து பேசியுள்ளார். `எனக்கு, இந்தித் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அமீர் கானின் திரைப்படத்தில் நடிக்க விரும்புகிறேன். அவர் திரைப்படங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள் மிகவும் நன்றாகவும் சவாலானதாகவும் இருக்கின்றன. அவரது திரைப்படங்கள், மக்களிடம் நேர்மறையான முறையில் கனெக்ட் ஆகிறது என்று நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About