ரஜினிக்கு சரிந்தது செல்வாக்கு! அரசியல் கணக்கெடுப்பில் திடுக் திடுக்

கடந்த பல வருடங்களாக விளக்கெண்ணையில் வாழைப் பழத்தை பிசைந்து மக்களுக்கு ஊட்டி வருகிறார் ரஜினி. ‘வருவேன்… வந்தாலும் வருவேன்’ டைப்பான இவரது அரச...

கடந்த பல வருடங்களாக விளக்கெண்ணையில் வாழைப் பழத்தை பிசைந்து மக்களுக்கு ஊட்டி வருகிறார் ரஜினி. ‘வருவேன்… வந்தாலும் வருவேன்’ டைப்பான இவரது அரசியல் பிரவேச பூச்சாண்டியை இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை மகாஜனங்கள். ஆனால் யாருமே எதிர்பாராத திசையிலிருந்து உள்ளே குதித்த கமல், அரசியல்வாதிகளுக்கு நாள்தோறும் கிலி ஏற்படுத்தி வருகிறார். இவர்களுக்கு இடையேயான இந்த வேற்றுமைக்கான ஆதரவும் எதிர்ப்பும் இப்போது வெளிப்பட்டுள்ளது.

குமுதம் வார இதழும் நியூஸ் 7 தொலைக்காட்சியும் இணைந்து மக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார்கள். அதில் ரஜினி, கமல், விஜய் குறித்த அரசியல் கேள்விகளுக்கு நெற்றிப் பொட்டில் அடித்தது போல வாக்களித்து கமல்ஹாசனை கை தட்டி வரவேற்கிறார்கள் மக்கள்.

திமுக- அதிமுக வுக்கு சவாலாக இருக்கப் போகும் நடிகர் யார்? என்ற கேள்விக்கு ஏராளமான வாக்காளர்கள் கமலுக்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். கமலுடன் ஒப்பிட்டால் பல மடங்கு சரிந்தேயிருக்கிறது ரஜினியின் வாய்ஸ்.

மூன்றாவது இடத்திலிருக்கிறார் விஜய்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About