மீண்டும் முருங்கை மரம் ஏறிய நயன்தாரா!

தங்கம் தங்கம் என்று தாங்கிக் கொண்டிருந்தது வேலைக்காரன் டீம். இதற்கு முன் நயன்தாரவை விக்னேஷ் சிவன் பட ஷுட்டிங்கில் கூட அப்படி தாங்கியிருக்க ...

தங்கம் தங்கம் என்று தாங்கிக் கொண்டிருந்தது வேலைக்காரன் டீம். இதற்கு முன் நயன்தாரவை விக்னேஷ் சிவன் பட ஷுட்டிங்கில் கூட அப்படி தாங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு அவ்வளவு மரியாதை. அதற்கு காரணமும் இருந்தது. தனி ஒருவன் படத்தில் நயன்தாராவை அழகாக காட்டவில்லை என்கிற வருத்தம் அவருக்கு இருந்தது. இனி மோகன் ராஜா படமே வேண்டாம் என்கிற அளவுக்கு கோபமாக இருந்தார் அவர். ஆனால் தன்னுடன் நயன்தாரா நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் சிவகார்த்திகேயனுக்கு இருந்தது.

பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகுதான் இப்படத்தில் நடிக்கவே ஒப்புக் கொண்டார் நயன். அதுவும் சிவகார்த்திகேயனுக்காக. மற்ற படங்களை விட, இங்கு சற்று அதிகமாக படியளந்தார்கள். ஏராளமான சுதந்திரம் இருந்தது அவருக்கு.

இதற்கு நடுவில்தான் அறம் படம் வெளிவந்தது. முதன்முறையாக அப்படத்தின் பிரமோஷன் விவகாரங்களில் கலந்து கொண்டார் நயன். படம் வெளியான அதே தினம் அவர் சில தியேட்டர்களுக்கும் நேரடி விசிட் அடித்தார். இதையடுத்து மீடியாவில் ஒரே நயன்தாரா புராணம்தான். அவர் மாறிவிட்டார். இனி அவர் நடிக்கும் பட பிரமோஷன்களில் கலந்து கொள்வார் என்றெல்லாம் எழுதினார்கள். பேசினார்கள். காத்திருந்தார்கள் வேலைக்காரன் ஆடியோ ரிலீசுக்காக.

ஆனால் எல்லாம் மாயை என்பது நேற்றுதான் உரைத்தது. யெஸ்… சென்னையிலேயே பிரமாண்டமான ஓட்டலில் ஏராளமான பொருட் செலவில் நடத்தப்பட்ட அந்த விமர்சையான விழாவுக்கு வரவேயில்லை நயன்தாரா. ‘மேம்… நீங்களும் இங்கு வந்திருந்தா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்? நாங்க உங்களை மிஸ் பண்றோம்’ என்று மேடையிலேயே தன் கவலையை வெளிப்படுத்தினார் தொகுப்பாளினி டி.டி.

சிவகார்த்திகேயன் மாதிரியான ‘பிரண்ட்லி’ ஹீரோக்களுக்கே ‘அக்லி’ முகம் காட்றீங்களே… உங்களையெல்லாம் எந்த லிஸ்டில் வைப்பது தலைவி?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About