கம்பி எண்ண வைத்த காதல் ரோஜா; வசமாகச் சிக்கிய ஆசிரியர்

விழுப்புரத்தில் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு ரோசாப்பூ கொடுத்து காதலைத் தெரிவித்த ஆசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றோர் ஆசிரியர...

விழுப்புரத்தில் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு ரோசாப்பூ கொடுத்து காதலைத் தெரிவித்த ஆசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றோர் ஆசிரியரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் அடுத்திருக்கும் மேல்நாரியப்பனூர் என்ற ஊரில் கிறிஸ்துவ தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த 14-ம் தேதி அதே பள்ளியில் 8-ம் வகுப்புப் படிக்கும் 13 வயது மாணவிஆசிரியர் ரம்யாவுக்கு (பெயர் மாற்றம்) அதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் நிர்மல் என்பவர், “ஐ லவ் யூ, நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன்” என்று சொல்லி ரோஜாப்பூ, மல்லிகைப்பூ, சாக்லேட் போன்றவற்றைக் கொடுத்திருக்கிறார். அதிர்ந்துபோன அந்த மாணவி என்ன செய்வதென்றே தெரியாமல் அழுதுகொண்டே தன் வகுப்பறைக்குச் சென்றிருக்கிறார். உடனே உஷாரான ஆசிரியர் நிர்மல், தன்னுடன் பணி புரியும் சக ஆசிரியரான லாரன்சிடம் நடந்தவற்றைக் கூறியிருக்கிறார்.

உடனே மாணவி ரம்யாவை அழைத்த அந்த இரு ஆசிரியர்களும், “ஏன் நிர்மல்குமார் சாரிடம் பேசாமல் வந்துவிட்டாய் என்று கேட்ட அவர்கள் “அந்த சார் ஐ லவ் யூ சொன்ன விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் அதற்குப் பிறகு, இந்த ஸ்கூலில் நீ படிக்க முடியாது” என்று மிரட்டியிருக்கிறார்களாம். அதனால் பயந்துபோன மாணவி ரம்யா, யாரிடமும் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்திருக்கிறார். வீட்டிலும் அழுதுகொண்டே இருந்ததால் அவளின் பெற்றோர்கள் விசாரித்திருக்கின்றனர். அப்போது நடந்தவை அனைத்தையும் அழுது கொண்டே அவர்களிடம் தெரிவித்திருக்கிறாள் ரம்யா. அதிர்ந்துபோன பெற்றோர் உடனே சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகத் திரண்ட பொதுமக்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தியதோடு ஆசிரியர்கள் நிர்மல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த லாரன்ஸ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அதையடுத்து அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி இன்று உத்தரவுப் பிறப்பித்திருக்கிறார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About