அனுபவம்
நிகழ்வுகள்
டிராபிக் ராமசாமியுடன் விஜய் சேதுபதி! எல்லாம் ஒரு அன்புதேன்!
March 23, 2018
தோலை உரிச்சாலும் சரி. வேலை முடியாம கிளம்ப மாட்டேன் என்று பேனருக்கு பேனர் படுத்துக் கொண்டு அடம் பிடிக்கும் டிராபிக் ராமசாமியை அண்மைக்காலமாக பேனர் ராமசாமியாகதான் பலருக்கும் தெரியும். ஆனால், சமூகத்தின் அழுக்கை துவைக்க வந்த வெளுப்பானாக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார் அவர். ஆணானப்பட்ட ஜெ. வின் அதிகாரத்தையே பல் இளிக்க விட்ட பலசாலி.
அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால், அதை எப்படி மதிக்க வேண்டும்? மற்றவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ? விஜய் சேதுபதிக்கு டிராபிக் ராமசாமி மீது செம கிக். எஸ்.ஏ.சந்திரசேகர் டிராபிக் ராமசாமி என்ற பெயரிலேயே உருவாகி வரும் படத்தில் அவரது கேரக்டரில் நடித்துவருகிறார். இதில் ஒரு முக்கியமான ரோலில் விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறாராம்.
ஒரே ஒரு போன் கால்தான். ஓடோடி வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. துண்டு துண்டாக தொங்கும் கதையை ஒட்ட வைப்பதே விஜய் சேதுபதிதான் என்கிறார்கள். இந்தக்கதையில் நடிக்க ஆசைப்பட்ட வி.சேவுக்கு அந்த பெரியவரை பார்த்து ஒரு ஹலோ சொல்ல ஆசைதான். ஆனால் இவரும் பிஸி. அவரும் பிஸி.
எப்போது நடக்கும் அந்த மின்னல் க்ளிக்?

0 comments