மனதை உருக்கிய கிளைமேக்ஸ்

தமிழ் சினிமாவில் இது வரை 1000 கணக்கான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால், ஒரு சில படங்களை மட்டும் தான் நாம் நியாபகத்தில் வைத்திருப்போம். அந்த ...

தமிழ் சினிமாவில் இது வரை 1000 கணக்கான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால், ஒரு சில படங்களை மட்டும் தான் நாம் நியாபகத்தில் வைத்திருப்போம். அந்த படம் நம் நினைவை விட்டு நீங்காது இருக்கும். அப்படி சில படங்கள் இருக்க காரணம் அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளாக தான் இருக்கும். அந்த வகையில் தமிழ் மக்களின் மனதை உருக்கிய கிளைமேக்ஸ் காட்சிகள் சில உங்களுக்காக..

மூன்றாம் பிறை

தமிழ் சினிமாவில் இன்றளவும் நம் மனதை பாதித்த கிளைமேக்ஸ் என்றால், மூன்றாம் பிறை தான். இப்படத்தில் கமலின் காதலியான ஸ்ரீ தேவி, மனநலம் சரியில்லாதவராக இருந்து, பின் கிளைமேக்ஸில் மனநலம் சரியாகி, கமலை யார் என்று தெரியாமல் போகும். அப்போது கமல் தன்னை நினைவு கூற எடுக்கும் முயற்சிகள் பார்ப்போரை நெகிழ வைத்தது.

குணா

மீண்டும் கமல் நடித்த ஒரு காதல் காவியம் தான் குணா. இதில் கமலுக்கு மனநலம் சரியில்லாமல் இருக்க, தன் கற்பனை காதலியை நினைத்து கொண்டு நிஜத்தில் ஒருவரை கடத்தி சென்று விடுவார். பின் கிளைமேக்ஸில் அவருக்கும் கமல் மேல் காதல் வர, இவர்கள் இணைய பெரிய சதியே நடக்கிறது. இதில் தன் காதலியை இழந்த கமல் மலையில் இருந்து குதித்து இறந்து விடுவார்.

சேது

சோகமான கிளைமேக்ஸ் என்றாலே பாலா குத்தகைக்கு எடுத்து விடுவார். இவர் இயக்கிய எந்த படத்திலும் பாசிட்டிவான கிளைமேக்ஸே இல்லை, இருந்தாலும் சேது எப்போதும் ஸ்பெஷல் தான். மனநலம் பாதிக்கப்பட்ட விக்ரம், குணமாகி காதலியை பார்க்க வரும் போது அவள் இறந்துவிடுகிறாள். அவள் இல்லாத உலகத்தில் நான் எதற்கு வாழவேண்டும் என மீண்டும் அவர் மருத்துவ மனைக்கே செல்கிறார்.

பருத்திவீரன்

படம் ஆரம்பித்ததிலிருந்து ஆட்டம், பாட்டம், அடிதடி என்று செல்ல இப்படத்தின் கிளைமேக்ஸ் நெருங்கியவுடன் பல பேர் தியேட்டரை விட்டு பிரிய மனமில்லாமல் எழுந்து சென்றனர். அது ஏன் என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. கார்த்தி செய்த சில தவறான முடிவுகள் கிளைமேக்ஸில் ப்ரியா மணியை எந்தளவிற்கு பாதித்தது என்பதை மிகவும் அழுத்தமாக கூறியிருப்பார் அமீர்.

சுப்ரமணியபுரம்

80களில் மதுரை பக்கத்தில் ஜாலியாக இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை நிழலாக காட்டிய படம். இதில் நட்பிற்காக சசிகுமார், ஜெய் எடுக்கும் சில தவறான முடிவுகள் அவர்கள் வாழ்க்கையை எந்தளவிற்கு திசை திருப்புகிறது என்பதை ரத்தமும், சதையுமாக கிளைமேக்ஸில் காட்டிய படம். தான் உண்மையாக காதலித்த பெண்ணே தன்னை கொலை செய்ய உதவிய காட்சி தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருந்தது.

இதேபோல் உங்கள் மனதை உருக்கிய கிளைமேக்ஸ் காட்சிகளை கமெண்டுகளில் தெரிவிக்கலாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About