அனுபவம்
நிகழ்வுகள்
“ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல” - பாரதிராஜாவுக்கு துணை நிற்கும் வைரமுத்து
May 13, 2018
இயக்குநர் பாரதிரஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது பழிவாங்கும் செயல் அவரை சட்டப்படி மீட்டெடுப்போம் எனக் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கடந்த ஜனவரி மாதம் சென்னை வடபழனியில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில், ஆண்டாளை விமர்சித்ததாக எழுந்த சர்ச்சையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசினார். அப்போது அவர் பேசுகையில் போது கடவுளை பற்றி அவதூராக பேசியதாகக் கூறி இந்து மக்கள் முன்னணியினர் பாரதிராஜா மீது வடபழனி காவல் நிலையத்தில் தற்போது புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் மத நம்பிக்கைக்கு எதிராகப் பேசுவது, மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதிராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுக்குக் கண்டனம் தெரிவித்து பாடலாசிரியர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் “பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல;ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை நாங்கள் சட்டப்படி மீட்டெடுப்போம்.” என குறிப்பிட்டுள்ளார்.

0 comments