அனுபவம்
நிகழ்வுகள்
இளையராஜா மற்றும் ரஹ்மானுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் - புகைப்படம் உள்ளே
May 12, 2018
தமிழ் சினிமாவில் 90களிலிருந்து தற்போது வரை உலகளவில் புகழ்பெற்ற கலைஞர்களாக திகழ்பவர்கள் ரஹ்மான் மற்றும் இளையராஜா. கல்விக்கு சம்பந்தமில்லாதவர் சில பிரபலங்களை பற்றி பள்ளி புத்தகத்தில் பாடமாக வருவது என்றால் பெரிய பாக்கியம்.
அந்த பாக்கியத்தை நம் இளையராஜா மற்றும் ரஹ்மான் அவர்கள் பெற்றுள்ளனர். நீட் மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளும் விதத்தில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 11ம் வகுப்புக்கான தமிழ் பாடத்தில் இசைத்தமிழர் இருவர் என்ற பாடப் பிரிவில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் வாழ்க்கை இடம் பெற்றுள்ளது. இவர்கள் இருவருமே பலமுறை தேசிய விருதுகளை வென்றவர்கள் குறிப்பிடத்தக்கது.
0 comments