`காலா வெற்றிபெற்று நல்ல வியாபாரம் ஆகும்' - கமல்ஹாசன் கருத்து..!

காலா படம் திட்டமிட்டபடி வெளியாகி வெற்றிபெற்று நல்ல வியாபாரம் ஆகும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார...

காலா படம் திட்டமிட்டபடி வெளியாகி வெற்றிபெற்று நல்ல வியாபாரம் ஆகும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

காவிரி தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குமாரசாமி பதவியேற்பு விழாவுக்குப் பின் இன்று இரண்டாவது முறையாகச் சந்தித்தார். அப்போது இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கமல்,  ``குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட வந்தேன். இந்தச் சந்திப்பு கூட்டணிக்கானதோ திரைப்படம் தொடர்பானதோ இல்லை முற்றிலும் மக்களுக்கானது" என்றார்.

இதன்பின் சென்னைத் திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ரஜினிகாந்தின் காலா படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,  ``என்னுடைய படத்துக்கும் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டது. நியாயமே வெல்லும் என்பதற்கு உதாரணமாக விஸ்வரூபம் படம் வெற்றிபெற்றது. அதுபோல் காலா படம் திட்டமிட்டபடி வெளியாகி வெற்றிபெற்று நல்ல வியாபாரம் ஆகும். காவிரி விவகாரத்தில் நாம்தான் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நீதிமன்றம் சொல்லி ஒற்றுமையாக இருக்க முடியாது. ஒற்றுமைக்கான சமிஞ்கை கர்நாடகாவில் தெரிகிறது. இரு மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமை நிலவ யார் வேண்டுமானாலும் முயற்சி எடுக்கலாம்" என்றார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About