­
July 2018 - !...Payanam...!

கலைஞர் கருணாநிதியின் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அமைதி நிலவி வருகிறது. அவர் நலமாக இருக்கிறார் என்ற ச...

<
கலைஞர் கருணாநிதியின் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அமைதி நிலவி வருகிறது. அவர் நலமாக இருக்கிறார் என்ற செய்தி பலருக்கும் மன அமைதியை தந்துள்ளது.விஜய்யின்வாழ்க்கையில் கலைஞரின் பங்கு மிக முக்கியமான ஒன்று. விஜய்யின் படங்களில் முக்கியமானது தலைவா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இப்படம் அப்போது பெரும் அரசியல் சர்ச்சையை சந்தித்தது.காரணம் படத்தில் இருந்த Time To Lead என்ற வசனம் தான். அந்நேரத்தில் படத்தை வெளியிட முடியாமல் இருந்தது. மேலும் படம் வெளியிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டது. அதையும் தாண்டி படம் வெளியானது.படம் வெளியீடு குறித்து பேசுவதற்காக கொடநாடு வரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க விஜய்யும், அவரின் அப்பாவும் சென்றார்களாம். ஆனால் பார்க்கமுடியாமல் போனதாம். ஆனால் படம் வெளியீடு பிரச்சனைக்கு தீர்வு கொடுத்ததற்காக ஜெயலலிதாவுக்கு விஜய் நன்றி கூறி அறிக்கை வெளியீட்டிருந்தார்.அதே வேளையில் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதி விஜய்க்கு ஆதரவாக...

Read More

இளையராஜா குரலில் யார் பாடினாலும் அதை இளையராஜா பாடியதாகவே நம்புகிற கூட்டம் ஒன்று இருக்கிறது. இதனால் அந்தப்பாடலை உருவாக்கியவர்களுக்கு போய் சே...

<
இளையராஜா குரலில் யார் பாடினாலும் அதை இளையராஜா பாடியதாகவே நம்புகிற கூட்டம் ஒன்று இருக்கிறது. இதனால் அந்தப்பாடலை உருவாக்கியவர்களுக்கு போய் சேர வேண்டிய பாராட்டோ, திட்டோ போய் சேர்வதில்லை. இந்த வழக்கம் இன்று நேற்றல்ல… அப்துல் கலாம் இறந்த தினத்தில் துவங்கியது.யாரோ, ஏதோ ஒரு படத்தில் பாடியதை இளையராஜாவே பிரத்யேகமாக போட்ட பாட்டு என்று சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டார்கள். அப்புறம் முட்டி மோதி அது அவரல்ல என்பதை தெரிந்து கொள்வதற்குள் அப்துல் கலாமின் அடுத்த நினைவு நாளே வந்துவிட்டது.அதற்கப்புறம் ஜெயலலிதா இறந்த போது இலங்கை கவிஞர் அஸ்மின் எழுதி வேறொரு இசையமைப்பாளர் இசையமைத்து பாடிய பாடல் அப்படியே அச்சு அசலாக இளையராஜா பாட்டு போலவே இருந்தது. விடுவார்களா? அம்மாவுக்காக இளையராஜா போட்ட பாட்டு என்று சமூக வலைதளங்களில் பந்தி வைத்துவிட்டார்கள். இப்போதும் அது இளையராஜா பாடிய பாடலாகவே உலா வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அது இளையராஜா இல்லங்க. நாங்கதான் உருவாக்குனோம்...

Read More

விஜய்சேதுபதி படம் என்றாலே தரமாக இருக்கும், கண்டிப்பாக எல்லோரும் போய் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த முறை ஜுங்கா என்ற படத்தை நட...

<
விஜய்சேதுபதி படம் என்றாலே தரமாக இருக்கும், கண்டிப்பாக எல்லோரும் போய் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த முறை ஜுங்கா என்ற படத்தை நடித்து தானே தயாரித்தும் இருக்கிறார். சரி வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதி கலக்கியிருக்கும் ஜுங்கா எப்படி இருக்கிறது, பார்ப்போம்.கதைக்களம்ஜுங்கா (விஜய் சேதுபதி) தாத்தா, அப்பா இருவருமே கேங்ஸ்டர்கள். தங்களை பெரிய தாதாவாக நினைத்து தங்களிடம் இருக்கும் பணம், சொத்து, தியேட்டர் என்று எல்லாவற்றையும் இழக்கிறார்கள். கண்டக்டராக இருக்கும் விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் தன் அப்பா, தாத்தா பற்றிய கதையை அறிகிறார். அவர்கள் இழந்த தியேட்டர் குறித்து அறிகிறார். உடனே அந்த தியேட்டரை மீட்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் ஜுங்கா.நடுவில் வரும் பிரச்சனைகளை சமாளித்து ஜுங்கா தன் அப்பா இழந்த தியேட்டரை மீட்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்எல்லா படம் போல தனக்கு கொடுத்த வேடத்தை சரியாக செய்துள்ளார். அதோடு யோகி...

Read More

கமல்ஹாசன் இயக்கும் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 படம் அடுத்த மாதம் ஓகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது தொடர்ப...

<
கமல்ஹாசன் இயக்கும் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 படம் அடுத்த மாதம் ஓகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.விஸ்வரூபம் முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம்-2 படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முயற்சித்து இருக்கிறோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட படம். இந்தியா-பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் ஒரு காரணம் அதில் எனக்கு வருத்தம் உண்டு அதன் அடிநாதம்தான் இந்த படம்.மற்றும் விஸ்வரூபம் மூன்றாம் பாகம் எடுப்பதும், எடுக்காததும் ரசிகர்கள் படத்துக்கு கொடுக்கும் வரவேற்பை பொருத்து அமையும்.ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்கள் பணி செய்வேன் என்று சொல்வதெல்லாம், பொய் என் தொழில் சினிமா எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த பிறகும் தொடர்ந்து நடித்தார். அவரைப்போல் கட்சி பணிகள் செய்து கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்னால் இயலாது...

Read More

இயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமா கண்ட ஒரு தனி நட்சத்திரம். எத்தனை படங்கள், எத்தனை பிரபலங்கள் என்ற எண்ணிக்கை அளவில்லாதது. இன்னும் படங்களை இய...

<
இயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமா கண்ட ஒரு தனி நட்சத்திரம். எத்தனை படங்கள், எத்தனை பிரபலங்கள் என்ற எண்ணிக்கை அளவில்லாதது. இன்னும் படங்களை இயக்கிவருகிறார்.ஹிந்தி சினிமா வரை அவரின் புகழ் நிலைத்திருக்கிறது. தற்போது விஜய் சேதுபதி, ஜோதிகா, சிம்பு என பலர் நடிக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தை இயக்கிவருகிறார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.மேலும் அவர் இருதய வலியாலும், உடல் நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளாராம். இதனால் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என பலரும் கூறி வருகிறார்களாம். ...

Read More

உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டி-ஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல் நோய்களைக் குணப்...

<
உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டி-ஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்தும்.சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும். குறிப்பாக மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும். நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை பருக வேண்டும்.கர்ப்பப்பை தொடர்பான சிக்கல்கள், வெள்ளைப்படுதல், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு போன்றவற்றைக் குணப்படுத்தும். நாவல் பழத்தைக் கஷாயம்...

Read More

மழைக்காலம் வந்துவிட்டாலே ஏராளமான நோய்களும் சேர்ந்தே வரும். அடிக்கடி சலதோஷம், காய்ச்சல் போன்றவை நம்மை தொற்றிக் கொள்ளும். எனவே இந்த மாதிரியான...

<
மழைக்காலம் வந்துவிட்டாலே ஏராளமான நோய்களும் சேர்ந்தே வரும். அடிக்கடி சலதோஷம், காய்ச்சல் போன்றவை நம்மை தொற்றிக் கொள்ளும். எனவே இந்த மாதிரியான நேரங்களில் வெந்தய டீ உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.தேநீர் தயாரிக்கும் முறை    வெந்தய விதைகளை உரலில் வைத்தோ அல்லது மிக்ஸியிலயே நுனிக்கி கொள்ளுங்கள்.    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.    அதனுடன் வெந்தய பொடியை போட்டு அதனுடன் ஹெர்பல் மூலிகை கூட சேர்த்து கொள்ளலாம்.    மூடியை போட்டு மூடி 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.    இப்பொழுது டீயை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.    அதனுடன் தேன் சேர்த்து சூடாக அல்லது குளிர்ந்த நிலையில் பருகலாம்.எடை அதிகமான நபர்கள் 6 வாரம் வெந்தய டீ யை எடுத்து வந்தாலே போதும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைத்து விடும்.நீரிழிவு நோய்வெந்தயத்தில் இருக்கக் கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை...

Read More

பெங்களூரைச் சேர்ந்த சுபாஷினியின் வீட்டுக்கு ஒரு டெலிவரி வந்திருக்கிறது. காலிங் பெல் அழுத்தி, அழைத்த அந்த நபரின் கையில் ஒரு பார்சல். அதில் ச...

<
பெங்களூரைச் சேர்ந்த சுபாஷினியின் வீட்டுக்கு ஒரு டெலிவரி வந்திருக்கிறது. காலிங் பெல் அழுத்தி, அழைத்த அந்த நபரின் கையில் ஒரு பார்சல். அதில் சுபாஷினியின் கணவர் பெயர் எழுதப்பட்டிருந்தது. ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரியில் இன்னுமோர் நூதன மோசடி... உஷார்! தினம் தினம் புதுப்புது தொழில்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. அதே வேகத்தில் அத்தொழிலில் ஏமாற்றுபவர்களும் முளைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்த விஷயம் ஆன்லைன் ஷாப்பிங். காலையில் பல் துலக்கும் டூத் பேஸ்ட்டில் தொடங்கி சாப்பிடும் இட்லி, அணியும் சட்டை, இரவில் தேவைப்படும் கொசுவத்திச் சுருள் வரை இணையத்தில் கிடைக்கின்றன. இதனை டெலிவரி செய்ய ஏராளமான டெலிவரி பாய்ஸ் வீட்டுக்கதவுகளைத் தட்டுவது வழக்கம். இதிலும் ஏகப்பட்ட முறை ஏமாற்றுவது தொடர்ந்து நடந்து வருகின்றன. அதில் ஒருவகை மோசடியைப் பற்றியதுதான் இந்தக் கதை. சென்ற வாரம் ட்விட்டரில் சுபாஷினி என்பவர் இதைப் பகிர்ந்திருந்தார். பெங்களூரைச் சேர்ந்த சுபாஷினியின் வீட்டுக்கு...

Read More

நல்லவேளை… மிஷ்கின் பிளைட் ஓட்டுகிற வேலையில் இல்லை. இருந்திருந்தால் உணர்ச்சிவயப்பட்டு, ‘அதோ ஒரு விவசாயி என்ன அழகா ஏர் ஓட்டுறான். அவனை பாராட்...

<
நல்லவேளை… மிஷ்கின் பிளைட் ஓட்டுகிற வேலையில் இல்லை. இருந்திருந்தால் உணர்ச்சிவயப்பட்டு, ‘அதோ ஒரு விவசாயி என்ன அழகா ஏர் ஓட்டுறான். அவனை பாராட்டுறதை விட துபாய்க்கு வண்டி ஒட்றதா முக்கியம்’ என்று வயலிலேயே வண்டியை இறக்கி பிளைட் கம்பெனி தலையில் துண்டு போட்டு மூடியிருப்பார்.எங்கு மைக் கிடைத்தாலும் உணர்ச்சி ததும்ப பேசுகிறேன் பேர்வழி என்று அவர் செய்யும் காமெடிக்கு தோதாக நேற்றும் ஒரு மேடை சிக்கியது. ‘பேரன்பு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாதான் அது. படத்தின் நாயகன் மம்முட்டியும் வந்திருந்தார். இயக்குனர் ராம் குறித்து மிஷ்கின் பேசியதுதான் ஒரே ஐயோ குய்யோ!ராம் மாதிரி ஒரு டைரக்டர் இல்லவே இல்ல. இப்பல்லாம் என்ன டேஷுக்கு படம் எடுக்குறானுங்களோ என்கிற ரீதியில் அடித்து பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். அப்படியே படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் பக்கம் திரும்பியவர், “தேனப்பன் சார். இதுக்கு முன்னாடி நீங்க எத்தனையோ படங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் படமே...

Read More

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை நினைத்தால் முதலில் சிவாஜி வருவார். அவருக்கு முன்னே அந்த கிடா மீசை வந்துவிடும். அரும்பு மீசையோடு ஒரு கட்டபொம...

<
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை நினைத்தால் முதலில் சிவாஜி வருவார். அவருக்கு முன்னே அந்த கிடா மீசை வந்துவிடும். அரும்பு மீசையோடு ஒரு கட்டபொம்மனை நினைத்துப் பாருங்களேன்… அந்த பாஞ்சாலங்குறிச்சியே தூக்கு மாட்டிக் கொள்ளும். அப்படியொரு வரலாற்றுப் பிழை, பிரபுதேவா கெட்டப் விஷயத்திலும் வந்துவிட்டது.‘பொன்மாணிக்கவேல்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா. நேர்மையில் சகாயம் வகையறாவை சேர்ந்தவர் இந்த பொன்மாணிக்கவேல். அந்த அரசனாகவே இருந்தாலும், ‘தப்புன்னா டுப்புன்னு சுட்டுபுடணும்’ என்கிறளவுக்கு ஆத்திரக்காரர். நேர்மை, கடமை, கம்பீரம் என்ற மும் மந்திரத்தின் முதல் அம்புதான் இவர். இவரது நேர்மையை கண்டு அஞ்சிய பல போலீஸ் அதிகாரிகள், இவர் பொறுபேற்கிற துறை எதுவோ, அங்கிருந்து டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு ஓடிய கதைகள் பலவுண்டு.நேர்மைக்காக பலமுறை பந்தாடப்பட்டாலும், ‘நான் பிறந்ததே உங்களுக்கு டென்ஷன் தர்றதுக்குதாண்டா’ என்று அதையும் சந்தோஷமாக எதிர்கொள்ளும் ஆண் மகன்! சமீபத்தில் சிலை திருட்டு பிரிவுக்கு வந்த பொன்மாணிக்கவேல், பல...

Read More

கார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. எப்போதும் க்ளிக் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத...

<
கார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. எப்போதும் க்ளிக் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத்து கதையில் ஒரு படி மேலே சென்றார், தற்போது ஹாட்ரிக் கிராமத்து கதையாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார், கார்த்தி ஹாட்ரிக் அடித்தாரா? பார்ப்போம்.கதைக்களம்ஊரிலேயே எல்லோரும் மதிக்கும் பெரிய இடத்து குடும்பத்தலைவராக சத்யராஜ். இவருக்கு 4 பெண் குழந்தைகள் வரிசையாக பிறக்கின்றது.ஆனால், நமக்கு ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என தவமாய் தவமிருக்க, கார்த்தி பிறக்கின்றார்.(தனக்கு ஏன் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்கு சத்யராஜ் விரும்புவதற்கு ஒரு காரணம் வைக்கப்பட்டுள்ளது).சத்யராஜ் குடும்பம் தான் அந்த ஊரே என்பது போல் அவ்வளவு பெரிய குடும்பம், அவருக்கு ஒரே ஒரு ஆசை தான், தன் குடும்பத்தினரை ஒன்றாக நிற்க வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான்.இந்த நேரத்தில் கார்த்தி தன் சொந்தத்தில் திருமணம் செய்யாமல், சாயிஷாவை காதலிக்க,...

Read More

Search This Blog

Blog Archive

About