ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?

மின்வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் அதிகப்படியான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி வர...

மின்வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் அதிகப்படியான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள் வாகனங்களினால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்கவும், அதனால் ஏற்படும் செலவீணங்களைக் குறைக்கவும் இந்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில், நாட்டில் இயங்கும் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின் வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?

அந்தவகையில், மின் வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி வரியை கணிசமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கூட்ஸ் மற்றும் சேவை வரியாக தற்போது 12 சதவீதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதனை, மத்திய அரசு 5 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால், எலக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?

மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய உதவும் கலன்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 18 சதவீத ஜிஎஸ்டியையும் 12 சதவீதமாக குறைக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது. ஆகையால், கூடிய விரைவில் மின் வாகனம் மற்றும் அதனைச் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் பொருள் ஆகியவற்றின் வரி குறைப்பிற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?

சாதராணமாக, எலக்ட்ரிக் வாகனங்களின் மிக அதிகமாக இருப்பதாலும், அதனைச் சார்ஜ் செய்வதற்கு போதுமான சார்ஜிங் நிலையங்கள் இல்லாத காரணத்தாலும், மக்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் போன்ற சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?

இந்நிலையில், எலக்ட்ரிக் கார்களின் விலையுயர்வில் சிறியளவு பங்கினை வகிக்கும் வரியையும் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அண்மைக் காலங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக மத்திய அரசு தொடுத்து வரும் போரின், மறுபக்கமாக இந்த நடவடிக்கைப் பார்க்கப்படுகின்றது.

அதேசமயம், எதிர்காலத்தில் எலக்ட்ரிக்வாகனங்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் உயர்த்த இது வழிவகுக்கும் என கூறப்படுகிறது. தற்போது, நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும், மிக மிக குறைவான அளவிலேயே மின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலைத் தவிர்க்க இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும் வகையில் அமையும்.

முன்னதாக இதேபோன்று, எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, மின் வாகனங்களின் பதிவு இலவசம் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. மேலும், எலக்ட்ரிக் வாகனங்களின் சுற்றுச்சூழலின் நண்பன் என்பதைக் குறிக்கும் விதமாக, அதற்கு பச்சை நிறத்திலான நம்பர் பிளேட்டைப் பொருத்தவும் உத்தரவிடப்பட்டது.

நாட்டை முழுமையாக மின் வாகனங்களின் ராஜ்ஜியமாக மாற்றும் முயற்சியை அரசு தற்போது மேற்கொண்டு வருகின்றது. இதனை வெளிப்படுத்தும் வகையிலாகவே, சமீபகலாமாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும், முயற்சிகளும் அமைந்துள்ளன. அதேசமயம், நாட்டில் இயங்கும் எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டிற்கும் முற்றுபுள்ளி வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About