அனுபவம்
நிகழ்வுகள்
திடீர் திருப்பம்.. கமல்ஹாசனுடன் பிரசாந்த் கிஷோர் அதிரடி சந்திப்பு.. மநீமவை தூக்கி நிறுத்துவாரா?
June 20, 2019
உள்ளாட்சி தேர்தலிலும் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வியூகம் வகுத்து தருவது குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கமல் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 16 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. பாரம்பரிய கட்சிகளெல்லாம் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிட்ட நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலிலும் 22 சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் கட்சி 12 இடங்களில் 3-ஆவது இடத்தை பிடித்து சாதனை பெற்றது. வாக்குச் சதவீதமும் அதிகரித்தது. மொத்தமாக 16 லட்சம் வாக்குகளை அள்ளி குவித்தது.
மக்கள் நீதி மய்யம்
தோற்றாலும் நிச்சயம் துவண்டு போக மாட்டோம். மீண்டும் எழுந்து நிற்போம் என கமல்ஹாசன் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதற்கேற்ப உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டுள்ளது.
கணிசமான வெற்றி
இந்த முறை வாக்கு சதவீதத்தை மட்டுமே அதிகரிக்காமல் வெற்றியை நோக்கி பயணம் செய்ய கமல் முடிவெடுத்துவிட்டார். இந்த தேர்தல்களில் கணிசமான வெற்றியை பிடித்து தாங்கள் யார் என்பதை நிரூபிக்க விரும்புகிறார்.
ஆலோசனை
அதற்கேற்ப உள்ளாட்சி தேர்தலிலும் வரும் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வியூகம் வகுத்து தருவது குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை மக்கள் நீதி மய்யம் அணுகியது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜெகன் பெரும் வெற்றி
பிரசாந்த் கிஷோர் முதல்வர்களாக நரேந்திர மோடி, நிதிஷ்குமார் ஆகியோருக்கும் பிரதமராக மோடிக்கும் வியூகம் வகுத்துக் கொடுத்துள்ளார். அண்மையில் ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பக்கா வியூகம் வகுத்து கொடுத்ததில் ஜெகன் பெரும் வெற்றி பெற்றார். இத்தகைய பிரசாந்த் கிஷோரை மம்தா பானர்ஜியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அணுகியுள்ளதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசன் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments