2.0... கூட்டிக் கழிச்சுப் பார்த்தோம்.. ஆனா, சீனா-ல உங்க கணக்கு தப்பா வருதே ரஜினி சார்!

சீனாவில் ரஜினியின் 2.0 படம் ரிலீசாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை பற்றிய குழப்பம் நீடித்து வருகிறது. ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்க...

சீனாவில் ரஜினியின் 2.0 படம் ரிலீசாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை பற்றிய குழப்பம் நீடித்து வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்திருந்த படம் '2.0'. கடந்தாண்டு ரிலீசான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. ரூ.600 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.800 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது. செல்போன் ஆபத்து, பறவைகளை காக்க வேண்டும் என பல நல்ல விசயங்களைப் பேசி இருந்தது இப்படம்.

இந்நிலையில், அடுத்த மாதம் 12ம் தேதி இப்படம் சீனாவில் ரிலீசாக இருக்கிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு போஸ்டரும் வெளியானது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தியேட்டர்கள் எண்ணிக்கை:

அதில், சீனாவில் இப்படம் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது தவறான தகவல் எனக் கூறப்படுகிறது. இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி சீனாவில் 66000 தியேட்டர்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 2.0 படம் வெளியாக வாய்ப்பில்லை என்கின்றனர்.

காட்சிகள் கணக்கு:

சீனாவைப் பொறுத்தவரையில் திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது ஒரு படம் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கைக்குக் பதிலாக அதன் காட்சிகளைத்தான் குறிப்பிடுவது வழக்கம். அதன்படி பார்த்தால், அங்கு 10 ஆயிரம் தியேட்டர்களில் தான் 2.0 படத்தை வெளியிடுகின்றனர்.

மெர்சல்:

சீன மொழியில் டப்பிங் செய்து ஆங்கில மொழி சப் டைட்டிலுடன் படம் வெளியாகிறது. ஏற்கனவே இதற்கு முன்னர் விஜய் நடித்த மெர்சல், அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ், தங்கல், பிகே போன்ற இந்தி படங்களும் சீனாவில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

தங்கல் சாதனை:

சீனாவில் இதுவரையில் அதிகபட்சமாக வசூலித்த இந்தியப் படம் என்ற பெருமை 'தங்கல்' படத்திற்கே உண்டு. அதன் ஒரு மாத மொத்த வசூல் சீனாவில் மட்டும் 1200 கோடி. அங்கு 9000 காட்சிகள் மட்டும்தான் திரையிடப்பட்டது. அதன் முதல் நாள் வசூல் மட்டும் 15 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About