அந்த பாவியை துண்டு துண்டா வெட்டணும்: ட்விங்கிளுக்காக கொந்தளிக்கும் பிரபலங்கள்

உத்தர பிரதேசத்தில் 3 வயது சிறுமியை கடத்தி கண்ணை நோண்டி கொலை செய்த கொடூரன்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் த...

உத்தர பிரதேசத்தில் 3 வயது சிறுமியை கடத்தி கண்ணை நோண்டி கொலை செய்த கொடூரன்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் 3 வயது சிறுமி ட்விங்கிள் சர்மா கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கடன் பிரச்சனையால் சிறுமியை கொன்று அவரின் கண்களை தோண்டி எடுத்து உடலை குப்பை மேட்டில் போட்டுள்ளார்கள். சிறுமியின் உடலை நாய்கள் கடித்துக் குதறிய கொடூரம் நடந்துள்ளது.

முதலில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை என்று அலிகார் போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள், நெட்டிசன்கள் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிம்ரன்

பேபி ட்விங்கிள் ஷர்மா பற்றிய செய்தி அறிந்து கவலையாக உள்ளது. ஒரு அப்பாவியிடம் இந்த அளவுக்கு கொடூரமாக நடக்க முடியுமா?. உடனே நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிம்ரன். என்ன தான் பிரச்சனையாக இருந்தாலும் பிஞ்சுக் குழந்தையை இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்ய எப்படி தான் மனம் வந்ததோ என்று நெட்டிசன்களும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

  ரவீனா டாண்டன்

அலிகாரில் 3 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் கண்களை தோண்டி, உடலை சிதைத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளனர். குற்றவாளியை தூக்கிலிட வேண்டும். சட்டம் விரைந்து செயல்பட வேண்டும் என்று பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் ட்விட்டரில் கொந்தளித்துள்ளார். #justicefortwinkle

 குஷ்பு

3 வயது ட்விங்கிள் ஷர்மாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மிருகத்தின் பெயர் முகமது ஜயீத். அந்த ஆள் இஸ்லாமியர் என்ன மனிதனே கிடையாது. அவனை துண்டு துண்டாக வெட்டியோ இல்லை என்றால் வெறி நாய்களிடமோ விட வேண்டும். அந்த பாவிக்கு இரக்கமே காட்டக் கூடாது என்று கோபப்பட்டுள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.

அக்ஷய் குமார்

ட்விங்கிள் ஷர்மாவுக்கு நடந்த கொடூரம் குறித்து அறிந்து அக்ஷய் குமார் பேரதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த குற்றத்தை செய்த கொடூரனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About