ரஜினியின் அருணாச்சலம் பட வாய்ப்பை முதலில் ஏற்க யோசித்த கிரேஸி மோகன்- ஏன் தெரியுமா?

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டைய உலுக்கியது நடிகர் கிரேஸி மோகனின் மரணம். ஜுன் 10ம் தேதி காலையில் நன்றாக இருந்த அவர் திடீர் வலி ஏற்பட...

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டைய உலுக்கியது நடிகர் கிரேஸி மோகனின் மரணம்.

ஜுன் 10ம் தேதி காலையில் நன்றாக இருந்த அவர் திடீர் வலி ஏற்படுகிறது என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

அவரது மரணம் எல்லோருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது. அவரது நினைவுகள் குறித்து கிரேஸி மோகன் அவர்களின் தம்பி பாலாஜி அவர்கள் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் பேசும்போது, கமல்ஹாசன் தான் அவருக்கு பிடித்த ஒரு மனிதர், எந்த விஷயமாக இருந்தாலும் அவரிடம் கேட்காமல் மோகன் எதுவும் செய்ய மாட்டார்.

ரஜினி அவர்களின் அருணாச்சலம் பட வாய்ப்பு கொடுத்த போது கூட நான் முதலில் கமல்ஹாசன் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினான்.

உடனே ரஜினி அவர்கள் கமல்ஹாசனிடம் போன் செய்து இந்த விஷயத்தை கூறியிருக்கிறார். மோகன், கமல்ஹாசனை சந்திக்க வீட்டிற்கு போனதும் அவர் ரஜினி பட வாய்ப்பா கண்டிப்பாக பண்ணுங்கள் என்று வாழ்த்தினார்.

அதன்பிறகே அருணாச்சாலம் பட வாய்ப்பை ஒப்புக் கொண்டார் மோகன் என்று கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About