இனி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க பெட்ரோல் பங்க் போக தேவையில்லை.. மத்திய அரசு சூப்பர் திட்டம்

பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க இனி பெட்ரோல் பங்க் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என தெரிகிறது. ஏனெனில் பெட்ரோல், டீசலை மக்கள் எளிதாக வாங்கும...

பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க இனி பெட்ரோல் பங்க் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என தெரிகிறது. ஏனெனில் பெட்ரோல், டீசலை மக்கள் எளிதாக வாங்கும் வகையில் அதனை சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்யும் யோசனையில் மத்திய அரசு இருக்கிறது. இதற்கு விரைவில் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை வாங்க வேண்டும் என்றால் மக்கள் இப்போது வரை பெட்ரோல் பங்குக்குத்தான் செல்ல வேண்டும் அதுவும் வாகனத்துடன் செல்ல வேண்டும்.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களை சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட வணிக வளாகங்களில் விற்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பாஜக சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு, அதிமுக சப்போர்ட்.. மொத்தம் 10 கட்சிகள் கைகோர்ப்பு

இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிபொருள் துறை அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை வகுத்து வருகிறது. அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்காக இடம்பெறப்போகும் இத்திட்டத்தின்படி சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் பெட்ரோலை பெறலாம். இதற்காக இதுவரை விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளை தளர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி சில்லறை எரிபொருள் விற்பனை பிரிவில் நுழையும் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச தேவையை குறைக்க பெட்ரோலிய அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாம். இதன்காரணமாக பியூச்சர் குரூப், ரிலையன்ஸ், சவுதி அராம்கோ ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த மே 30ம் தேதி மீண்டும் பதவியேற்றது. இந்த அரசின் முதல் 100 நாள் திட்டத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பெட்ரோல் விற்பனை திட்டமும் இருக்கிறதாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About