யாருப்பா அது.. கருப்பு டிரஸ்ல கலக்கலா போட் ஓட்றது.. அடடா நம்ம ஸ்டாலின்!

பிளாக் & பிளாக் டிரஸ்ஸில் முக ஸ்டாலினின் படகு சவாரி போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே கருணாநிதி குடும்பத்துக்கு என்று...

பிளாக் & பிளாக் டிரஸ்ஸில் முக ஸ்டாலினின் படகு சவாரி போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே கருணாநிதி குடும்பத்துக்கு என்று ஒரு தனி ஜீன் உள்ளது. அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு யாருக்கும் வயசு அவ்வளவாக தெரியாது.

இதில் அநியாயம் ஸ்டாலின்தான். வயசு 65-க்கு மேல் ஆகிறது. ஆனாலும் இன்னும் யூத்ஃபுல்லாக இருக்கிறார் மனுஷர்!! இவர் 40 வயதை கடந்து நீண்ட காலம் ஆகியும் திமுக இளைஞர் அணி தலைவராகவே இருந்தார். அதற்கேற்ற தோற்றமும் அவருக்கு பெரிதும் கைகொடுத்தது.

ஆனால் இதெல்லாம் சும்மா வந்து விடவில்லை. உடற்பயிற்சி செய்வதற்காகவே வீட்டில் தனியாக 'ஜிம்' வைத்திருக்கிறார் ஸ்டாலின். நமக்கு நாமே பயணத்தின்போது, கலர் கலர் டி- ஷர்ட் போட்டு, வயசு பையன்களின் காதில் புகைச்சலை தந்தார்.

தமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்

20 வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் இருந்தார் ஸ்டாலின். ஒல்லியான தோற்றத்துடன், முன்பக்க நெற்றியில் கற்றைமுடி புரள, கலர் கலர் சட்டையில் இருப்பார். இப்போதும் அப்படியேதான் இருக்கிறார். இப்போது நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரங்களின்போதும் ஜாக்கிங்-வாக்கிங்-டாக்கிங் என கலக்கினார்.

இப்போது ஸ்டாலின் தனிப்பயணமாக சிங்கப்பூர் போயுள்ளார். அங்கு படகை ஓட்டிக் கொண்டு சவார செய்கிறார். சில நாட்களுக்கு முன்புகூட கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ஸ்டாலின் அவருடைய மனைவியுடன் படகு சவாரி செய்தார். இப்போது சிங்கப்பூரில் கருப்பு கலர் டிரஸ்ஸில், கூலிங் கிளாசுடன் சவாரி செய்கிறார். இந்த போட்டோ படு வைரலாகி உள்ளது. இதில், இளமை ததும்பும் தலைவரை கண்டு திமுகவினர் புல்லரித்து போய்உள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About