நேர்கொண்ட பார்வை நடிகரை விளாசிய பாடகி சின்மயி

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி பெரிய சர்ச்சையை கிளப்பியவர். வெளிநாட்டிற்கு ஒரு விழாவிற்கு சென்றபோது அவர் தன்னை படுக்க...

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி பெரிய சர்ச்சையை கிளப்பியவர். வெளிநாட்டிற்கு ஒரு விழாவிற்கு சென்றபோது அவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என புகார் கூறினார் சின்மயி.

அதன்பிறகு அவர் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார். இருப்பினும் தொடர்ந்து வைரமுத்து மற்றும் மற்ற மீடூ சர்ச்சை பிரபலங்கள் பற்றி ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் சின்மயி.

இந்நிலையில் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள பிரபல தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டேவை சின்மயி ட்விட்டரில் விலகியுள்ளார். வைரமுத்துவின் வீடியோ ஒன்றை பாண்டே வெளியிட்டிருந்த நிலையில், அதை பார்த்து கோபமான சின்மயி "பாண்டே போன்ற பத்திரிகையாளர்கள் வைரமுத்துவை ஒரு கேள்வி கூட கேட்கவில்லை, பெண்களை மட்டும் கேள்வி கேட்டே கொல்வார். தவறு செய்பவர்கள் கொண்டாடுவார். நல்ல தமிழ் பண்பாடு" என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About