நம்பி வீட்டுக்குள்ள விட்டா இமான் அண்ணாச்சி இப்படி பண்ணலாமா?... நம்ப முடியல ... ஆனா இதான் உண்மை

இமான் அண்ணாச்சிய பார்த்தாலே வடிவேலுவைப் போல சின்ன குழந்தைகளுக்கு குஷி தான். அதிலும் அவரைக் கலாய்ப்பதென்றால் அப்படி ஒரு சந்தோஷம். அவரும் இது...

இமான் அண்ணாச்சிய பார்த்தாலே வடிவேலுவைப் போல சின்ன குழந்தைகளுக்கு குஷி தான். அதிலும் அவரைக் கலாய்ப்பதென்றால் அப்படி ஒரு சந்தோஷம். அவரும் இதுபோன்ற விஷயங்களை ஜாலியாகவே எடுத்துக் கொள்வார்.

அந்த அண்ணாச்சி இதற்கு சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தார்? யாரும் எதிர்பார்க்காத அவருடைய காதல் போன்ற கதையைத் தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

இமான் என்கிற இமானுவேல்

இமான் அண்ணாச்சியை பற்றிய சுய விவரங்கள் பெரிதாக யாருக்கும் தெரியவில்லை. இவருடைய இயற்பெயர் இமானுவேல். எல்லோரும் இமான் என்று அழைக்க ஆரம்பித்தனர். அதுவே இயற்பெயராக மாறிவிட்டது.

பிறப்பு

அண்ணாச்சி பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டாரப் பகுதியில் உள்ள திருவளுதிநாடார் விளை என்னும் கிராமத்தில் தான் பிறந்தார். இவர் பிறந்தது 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி.

சின்னத்திரை நுழைவு

சின்னத்திரையைப் பொருத்தவரையில், முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் தான் பணிபுரிந்தார். அதில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அது அவருக்குப் பெரிதாகக் கை கொடுக்கவில்லை.பிறகு சன் டீவிக்கு வந்துவிட்டார்.

சன் டீவி பயணம்

சன் டீவிக்கு வந்தபின்பு அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு மக்கள் தொலைக்காட்சியில் நடத்திய அதே சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சி தான். ஆனால் இந்த முறை அந்த நிகழ்ச்சி தான் இமான் அண்ணாச்சியை வெளியுலகத்துக்கும் குழந்தைகள் மத்தியிலும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என அனைவரிடமும் மிக எளிதாகக் கொண்டு சேர்த்தது.

குட்டி சுட்டீஸ்

அதையடுத்து மழலை மாறாத சிறுவர்களுக்கான குட்டி சுட்டீஸ் என்னும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அது இன்னும் நிறைய புகழைப் பெற்றுத் தந்தது. அதில் வரும் குழந்தைகள் அண்ணாச்சியை கேட்காத கேள்விகள் எல்லாம் கேட்கும். ஆனாலும் அதை சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்வார். தற்போது சீரியல் நடிகைகளை வைத்து சீனியர் சுட்டீஸ் என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.

சினிமா என்ட்ரி

சினிமாவில் அண்ணாச்சி முதலில் நடித்தது சென்னைக்காதல் என்னும் திரைப்படத்தில் தான். அதன் பிறகு 2006 ஆண்டு முதல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். சென்னைக்காதலை தொடர்ந்து சுந்தர்.சியுடன்இணைந்து தலைநகரம் படத்தில் வடிவேலுவுடன் நடித்தார்.

நடித்த படங்கள்

சென்னைக்காதல், தலைநகரம் (2006), வேட்டைக்காரன் (2009), கோ (2011), நீர்ப்பறவை, பாகன் (2012), மரியான், நையாண்டி, ஜில்லா, கயல்? அதுவேற இது வேற, கோலிசோடா, என்ன சத்தம் இந்த நேரம், விடியும்வரை பேசு, காதலை தவிர வேறு ஒன்னும் இல்ல, போங்கடி நீங்களும் உங்க காதலும், பட்டைய கிளப்பணும் பாண்டியா, மெட்ராஸ், பூஜை, காக்கிச்சட்டை, புலி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

சீரியல்கள்

இவர்கள் திரைப்படங்கள் மட்டுமல் அல்லாது சீரியல்களிலும் நடித்திருக்கிறார். கஸ்தூரி என்ற சன் டீவி சீரியலில் தான் அண்ணாச்சி நடித்திருக்கிறார்.

குறும்படம்

அதுமட்டுமா? குறும்படமும் அண்ணாச்சியின் குறும்பைச் சொல்லும். ப்ளீஸ் குளோஸ் தி டோர் என்னும் குறும்படத்தில் நடித்திருக்கிறார்.

அண்ணாச்சிய இப்படி பண்ணினாரு?

சரி இதெல்லாம் விடுங்க. அப்படி அவர் பண்ணக் கூடாத காரியம் ஒன்று பண்ணியிருக்கறோரே அத பத்தி பார்க்கலாம்.

இவருடைய திருமணம் காதல் திருமணம். ஆனா எப்படி காதலிச்சாருன்னு தெரியுமா? இவரோட சின்ன வயசுல இவரு ஊர்ல ஒரு சின்ன ஸ்கூல் இருந்துச்சாம். அதுல மொத்தமே 2 வாத்தியாருங்க தான். அதுல ஒருத்தர் பேரு பச்சைமுத்து வாத்தியார். அவருக்கு அண்ணாச்சி மீது கொஞ்சம் அக்கறையும் பாசமும் அதிகம். அதனால் சில சமயங்களில் வீட்டுக்குக் கூட அழைத்துச் செல்வார்.

அண்ணாச்சியும் அடிக்கடி அவர் வீட்டுக்குப் போய், தன்னை நம்பின வாத்தியாரு பொண்ணையே கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்காரு.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About