9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை, தெரியாமல் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற அமேசான்!

அமேசான் பிரைம் டே சேலில், 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சமபவம் அரங்கேறியுள்ளது. அமேசான் நிறுவனம்...

அமேசான் பிரைம் டே சேலில், 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சமபவம் அரங்கேறியுள்ளது.

அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ‘பிரைம் டே சேல்’ நடத்தி வருகிறது. இதில் அமேசான் பிரைமில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறைந்த இந்தாண்டு பிரைம் டே சேல் கடந்த 15,16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஒவன் என வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

இதே போல், அமேசான் கிண்டல், கேமரா, வாட்ச், ஹெட் செட் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வாட்ச், ஷூ, டிரெஸ், பேக், என பேஷன் பொருட்களும் அமேசான் பிரைம் டே சேலில் கிடைக்கிறது. கிண்டல், ஃபயர் டிவி, எக்கோ உள்ளிட்ட அமேசான் தயாரிப்புகளுக்கு 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது

இந்த நிலையில், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா, வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தெரியாமல் விற்கப்பட்டிருக்கலாம் என்று அதனை வாங்கிய வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் அமேசான் தரப்பில் இருந்து இது தொடர்பான விளக்கம் எதுவும் வெளிவரவில்லை.

எது எப்படியோ, தெரிந்து வந்ததோ தெரியாமல் வந்ததோ.. கிடைத்தால் போதும் என்ற வகையில் கேமரா பிரியர்கள் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலானகேமராவை 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி விட்டனர். மேலும், தங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்தனர். இதனால் குறிப்பிட்ட அளவிலே இருந்த கேமரா, உடனுக்குடன் விற்றுத்தீர்ந்தது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About