அடுத்த மாதம் முடிகிறது தர்பார் படப்பிடிப்பு… அடுத்து புதிய படம் அறிவிக்கிறார் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் சினிமாவை விட்டு விலகுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலே எங்கள் இ...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் சினிமாவை விட்டு விலகுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு என்று கூறிவிட்ட ரஜினி, எம்ஜிஆர் பாணியில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அடுத்த சட்டமன்ற தேர்தல் 2021-ல்தான் நடக்கும் என்பதால் இன்னும் ஓரிரு படங்களில் நடிக்கும் முடிவில் இருக்கிறார். தற்போது நடித்து வரும் தர்பார் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்தப் படத்துக்கு பிறகு சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் ரஜினிகாந்த் தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை புறப்படுவதற்கு முன்னால் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் இயக்குநர் சிவாவை சந்தித்துப் பேசினார். அப்போது கதை சம்பந்தமாக அவர்கள் விவாதித்தகாக கூறப்படுகிறது. சிவா ஏற்கனவே சிறுத்தை, வேதாளம், வீரம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியவர். இதுபோல் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட மேலும் சில இயக்குநர்களும் ரஜினிகாந்திடம் கதை சொல்லி உள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About