ஒரு மொபைல், சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ்! சினிமா எடுக்க இவை போதும்!
July 17, 2017மொபைலில் சினிமா பார்க்கும் காலம் கரையேறி, மொபைலிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு வளர்ந்த ஹை-டெக் சூழல் இது. குறும்படமோ, ஆவணப்படமோ, திரைப்படமோ...
ஒளிப்பதிவு:
காட்சியை கேமராவில் பதிவாக்கும் அழகியலுக்கான மெனக்கெடலில் சிரமங்களைக் குறைக்கும் `டி.எஸ்.எல்.ஆர்.கன்ட்ரோலர்' போன்ற மொபைல் அப்ளிகேஷன்கள் ஆண்ட்ராய்டில் இருக்கின்றன. கேபிள் உதவியோடு டி.எஸ்.எல்.ஆர் கேமராவை இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் இணைத்தால், உங்கள் மொபைல் மூலமாகவே கேமராவை இயக்கலாம். ஒளிப்பதிவாளரின் க்ரியேட்டிவிட்டியை அதிகரிக்கச் செய்வதோடு, கேமராவைக் கையாள்வதில் இருக்கும் சிரமமும் கொஞ்சம் குறையும். இதற்கு கம்ப்யூட்டர், லேப்டாப் தேவையில்லை. கையடக்க மொபைல் போதும்.
எத்தனையோ இயக்குநர்கள் `சூரிய உதயத்தைப் படமாக்கக் காத்திருந்தோம்', 'சூரியன் மறைவதை எடுக்கக் கால் கடுக்க நின்றுகொண்டிருந்தோம்' எனப் பேசியிருக்கிறார்கள். காத்திருப்புகள் தேவையில்லை என்பதற்குதான், `கோல்டன் ஹவர்' என்ற அப்ளிகேஷன். சூரிய உதயம் அல்லது மறைவைப் படமாக்க இந்த அப்ளிகேஷனின் உதவி போதும். ஏனெனில், சூரிய உதயமோ அல்லது மறைவோ... `இந்த நேரத்தில் தொடங்கி இந்த நேரத்தில் முடியும்' என்ற அறிவிப்பை இந்த அப்ளிகேஷன் கொடுத்துவிடும். தவிர, இயற்கையான லைட்டிங்கில் படமாக்க விரும்பும் படைப்பாளிகளுக்கு இந்த அப்ளிகேஷன் `லைட்டிங்' அமைப்பதில் பல வகைகளில் உதவி செய்யும். தவிர, சூரிய உதயத்துக்காகக் காத்திருக்கும் நேரத்தில் படப்பிடிப்பின் பிற பணிகளைக் கவனித்து நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ளலாம்.
எடிட்டிங்
ஆண்ட்ராய்டில் வீடியோ எடிட்டிங்குக்கான அப்ளிகேஷன்கள் அதிகம் இருந்தாலும், சிறந்த வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் `பவர் டைரக்டர்'. வீடியோ எடிட்டிங்குக்கு இந்த மொபைல் அப்ளிகேஷனே பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. வீடியோவை கட் செய்வது, இணைப்பது, வாய்ஸ் மிக்ஸிங்... எனப் பல வேலைகளை இந்த எடிட்டிங் அப்ளிகேஷனில் எளிதாகச் செய்யலாம். தவிர, ஸ்லைடு ஷோ, அனிமேஷன்களை உருவாக்கிக்கொள்ளும் வசதிகளும் இதில் இருக்கின்றன.
க்ளாப் போர்டு
வேறென்ன? ரோலிங்... ஆக்ஷன் சொல்லி சட்டென அடிக்கும் க்ளாப் போர்டும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனில் உண்டு. க்ளாப் போர்டில் ஒவ்வொரு முறையில் எழுதி அழித்துக்கொண்டிருக்கும் இம்சை இதில் இருக்காது. ஷூட்டிங் பகலில் நடக்கிறதா, இரவில் நடக்கிறதா? இண்டோர் ஷூட்டிங்கா, அவுட்டோர் ஷூட்டிங்கா... போன்ற தகவல்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
திரைக்கதை :
திரைப்பட உருவாக்கத்தின் முதன்மைப் பணி திரைக்கதை அமைப்பது. முதுகு நோக உட்கார்ந்து விரல் தேய பேப்பரில் எழுதிக்கொண்டிருக்காமல், கேர்ள் ஃப்ரெண்டுடன் சாட்டிங் செய்வதுபோல எளிமையாக எழுதலாம் திரைக்கதை. அதற்குதான் `செல்டெக்ஸ்' என்ற அப்ளிகேஷன் உதவுகிறது. காட்சி அமைப்புக் குறிப்புகளைச் சேர்த்துக்கொள்வது என எளிமையான அதே சமயம் நேர்த்தியான திரைக்கதை அமைப்புக்கு இந்த அப்ளிகேஷன் உத்தரவாதம்.
தவிர, நாம் உருவாக்கிய திரைக்கதையை வேறு யாரும் மாற்றம் செய்யவோ, அழிக்கவோ முடியாதபடி திரைக்கதையை லாக் செய்துவைக்கும் வசதி இருக்கிறது. ஸ்டோரி டெவலப்மென்ட் ஃபார்ம், நாம் உருவாக்கும் காட்சிக்கு எப்படி ஒளியமைப்பு செய்யலாம் என்பதை விளக்கும் ஸ்கெட்ச் டூல், படப்பிடிப்புக்கு எந்தெந்தக் காட்சிகளுக்கு என்னென்ன பொருள்கள் தேவை என்பதைக் குறித்துவைத்துக்கொள்ளும் கேட்லாக்ஸ் வசதி, நாமே ஒரு தேவையை உருவாக்கிக்கொண்டு அதில் தகவல்களைச் சேகரித்துக்கொள்ளும் வசதியும் இதில் இருக்கிறது. முக்கியக் குறிப்பாக, திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படையைத் தெரிந்துகொள்ள புகழ்பெற்ற சில திரைப்படங்களின் திரைக்கதைகளும் இதில் இடம்பெற்றிருக்கும்.
பப்ளிசிட்டி :
குறும்படம், திரைப்படம், ஆவணப்படம், ஆல்பம், வீடியோ கவரேஜ்... என எந்த வகையான ஒளிப்படைப்புக்கும் `போஸ்டர் டிசைன்ஸ்' முக்கியம். முதல் கவனம் பெறும் அத்தகைய போஸ்டர்களுக்கு விதவிதமான வளைதளங்கள், சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தவேண்டிய அவசியத்தைக் குறைக்கிறது `போஸ்டர் மேக்கர்' அப்ளிகேஷன். பெரிதுபடுத்திப் பார்க்கும்போது தெரியும் தரக்குறைபாடு தவிர, இது `ஓகே ரக' போஸ்டர்களை இந்த அப்ளிகேஷன் உதவியோடு உருவாக்கலாம் அல்லது உருவாக்கிய போஸ்டரின் தரத்தை மேம்படுத்தி, செலவையும் நேரத்தையும் குறைத்துக்கொள்ளலாம்.
இதுதவிர, டப்பிங் வசதிக்கு `வாய்ஸ் ரிக்கார்டர்', ஒலியமைப்புக்கு உதவும் `சவுண்ட் ரிக்கார்டிங்' அப்ளிகேஷன், ஒலிகளைத் திருத்திக்கொள்ளும் `ஆடியோ எடிட்டர்' செயலி... என ஒரே ஒரு மொபைல் போன் உதவியுடன் ஒரு திரைப்படத்தைச் செதுக்கலாம், குறும்படம்/ஆவணப்படங்களை எடுத்து அசத்தலாம்.
உங்கள் கையில் இந்த 'H' ரேகை இருக்கா பாருங்க
July 17, 2017ஜோதிடங்களில் பலவகை இருப்பது நாம் அறிவோம், அதில் பலரும் அதிகம் நம்புவது கைரேகை ஜோதிடம். நமது உள்ளங்கை ரேகைகளை வைத்து செல்வம், தொழில், இல்வ...
நமது உள்ளங்கை ரேகைகளை வைத்து செல்வம், தொழில், இல்வாழ்க்கை, தனிநபர் குணாதிசயங்கள் கூறப்படும்.
அந்த வகையில் ஒரு நபரின் உள்ளங்கை ரேகையில் H என்ற எழுத்தை போல ரேகை இருந்தால் அவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என நாம் இனி இங்கு காணலாம்.
"H" ரேகையானது மூன்று ரேகைகளின் இணைப்பில் உருவாகியிருக்கும் ரேகையாகும். இது இதயம், அதிர்ஷ்டம் மற்றும் தலை ரேகைகளின் இணைப்பை கொண்டது.
இந்த "H" ரேகை கொண்டிருப்பவர்கள், அவர்களது வாழ்வில் நாற்பது வயதுக்கு மேல் வெற்றிகரமாக திகழ்வார்கள். நாற்பது வயதுக்கு பிறகு அவரது வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் உண்டாகும்.
நாற்பது வயதுக்கு மேல் அவர்களது வாழ்வில் திடீர் பொருளாதார எழுச்சி காண்பார்கள். அவர்களது பெரும்பாலான முயற்சிகள் மற்றும் வேலைகள் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.
தாங்கள் விரும்பும், காதலிக்கும் நபர்களுக்கு, எதிர்பார்ப்பை தாண்டி அதிகம் உதவுவார்கள். ஆரம்ப காலத்தில் இவர்களுக்கு அதிர்ஷ்டம் என்று எதவும் உதவி இருக்காது. ஆயினும் இவர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்க மாட்டார்கள்.
நீங்க நாற்பது வயதுக்கு முன்னே முயற்சி செய்த கடின உழைப்பிற்கான பயன்கள் கூட நாற்பது வயதிற்கு பிறகு உங்களை வந்தே சேரும்.
இந்த "H" ரேகை இருக்கும் நபர்கள் இயற்கையாகவே உணர்ச்சிவசப்பட கூடிய நபர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். இவர்களது தாராள மனதால், மக்கள் இவர்களை ஏமாற்றவும் செய்வார்கள்.
இந்த "H" ரேகை கொண்டிருப்பவர்கள் வாழ்வில் அதிக கடின சூழல்களை கடந்து வந்திருப்பார்கள். தடங்கல், இடையூறுகள் என இவர்கள் செல்லும் பயணத்தில் பல இடைஞ்சல்கள் கடந்திருப்பார்கள்.
"H" ரேகை இருக்கும் நபர்கள் அதிக தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்கள் கொண்டிருப்பார்கள். இதனால் இவர்கள் கடினமாக, விடாப்படியாக உழைத்து கொண்டே இருப்பார்கள்.
அறிவாளி என்பதை தாண்டி, இவர்களிடம் புத்திகூர்மை சிறப்பாக இருக்கும்.
பிக்பாஸில் அனைவரையும் ஏமாற்றிய காயத்ரி - ஆதாரத்துடன் நிரூபித்து அசிங்கப்படுத்திய கமல்
July 17, 2017பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலங்களின் இன்னொரு முகம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது. இதில் காயத்ரி சிலரை தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார்...
இதில் காயத்ரி சிலரை தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தனக்கு கால்சியம் குறைபாடு இருக்கிறது சாக்லேட் பவுடர் வேண்டும் என்றார்.
மேலும், ரத்தப்பரிசோதனை செய்த டாக்டர் தனக்கு குறைபாடு இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அனைவரிடமும் கூறினார்.
ஆனால் இன்று உலகநாயகன் கமல்ஹாசன், பிக்பாஸ் காயத்ரியிடம் கால்சியம் சீராக இருக்கிறது என்று கூறியதை வெளியில் வந்து மாற்றி பொய் பேசியதை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
இதை சற்றும் எதிர்பாராத காயத்ரி உடனே தனக்கு சீராக என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்று கூறி சமாளித்தார்.
தெலுங்கில் BiggBoss நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் 14 பிரபலங்கள் இவர்கள்தான்
July 17, 2017பாலிவுட்டில் 10 சீசனுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்றை பெற்ற ஒரு நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சி தமிழில் கமல்ஹாசன் தொகுத்த...
இந்த நிலையில் நேற்று ஜுன் 16ம் தேதி தெலுங்கில் இந்த நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்களின் விவரம் வெளியாகியுள்ளது. இவர்கள் தான் அந்த 14 பிரபலங்கள்
Archana aka Veda Sastry
Sameer
Mumaith Khan
Prince Cecil
Madhu Priya
Sampoornesh Babu
Jyothi
Singer Kalpana Raghavendra
Mahesh Kaththi
Katti Karthika
Shiva Balaji
Hari Teja
Adarsh Balakrishna
Dhanraj
சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்- அப்போ தனுஷின் வட சென்னை?
July 17, 2017வெற்றிமாறனின் இயக்கத்தில் வட சென்னை படம் பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால் படத்தின் வேலைகள் நடக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. இந்த நில...
இந்த நிலையில் வெற்றிமாறன் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கும் படம் ஒன்றை இயக்கயிருப்பதாகவும், அந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அப்போது தனுஷின் வட சென்னை படம் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
'கடம்பன்' கைவிட்டதால், அண்ணாநகர் வீட்டை விற்ற ஆர்யா!
July 17, 2017சினிமாவில் எதற்காக வந்தார்களோ அந்தத் தொழிலை மட்டும் செய்து வந்தாலே ஜெயிப்பது நிச்சயம். 'செல்லமே' படத்தில் அறிமுகமாகி நடிகராக நடித்...
ஆரம்பத்தில் ஆர்யாவும் நடிப்பதை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார். பெரும்பாலான நடிகர்கள் ஒரு படத்தில் ஒப்பந்தமான பிறகு, அந்தப் படத்துக்கான டப்பிங்பேசி கொடுப்பதற்கு முன்பே சம்பளமாகப் பேசிய மொத்த தொகையையும் செட்டில் செய்யச் சொல்லுவார்கள். ஒருவேளை தயாரிப்பாளர் பணத்தைத் தராவிட்டால் டப்பிங் பேசுவதற்கு வரவே மாட்டார்கள். அதுபோல ஆர்யாவை ஒப்பந்தம் செய்த ஒருசில தயாரிப்பாளர்கள் பேசிய சம்பளத்தைத் தரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு கைவிரித்து இருக்கிறார்கள். அப்போது எல்லாம் கறார் காட்டாமல் பல படங்களுக்குப் பணமே வாங்காமல் டப்பிங்பேசி கொடுத்து இருக்கிறார், ஆர்யா. 'மீகாமன்' படத்தைத் தயாரித்த ஜபக் அந்தப் படத்தை வெளியிட பணம் இல்லாமல் தவித்தபோது பைனான்ஷியர் ஒருவரிடம் சொந்தமாகப் பணம் வாங்கிக் கொடுத்து ரிலீஸ் செய்ய உதவினார்.
ஆர்யா சொந்தமாகப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்த பிறகு, பெரும் சிக்கலில் சிக்கிக்கொண்டார். எதிர்பார்த்த அளவுக்கு 'சேட்டை' திரைப்படம் ஜெயிக்காததால் சிரமத்துக்கு ஆளானார். இப்போது சொந்தமாக 'கடம்பன்' படத்தைத் தயாரித்து, அந்தப் பட கேரக்டருக்காக ஹோம்-ஒர்க் செய்து உடல் எடையைக்கூட்டி சிரமப்பட்டு நடித்தார். அந்தப் படம் பெரிதாக பிசினஸ் ஆகாததால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தார். அப்போது ஒரு பிரபல தயாரிப்பாளர் ரிலீஸ் செய்ய முன்வந்தார். 'உங்களோட 'கடம்பன்' ஜெயிச்சுட்டா ஒ.கே, தோத்து போயிட்டா என்ன பண்றது. முன்கூட்டியே உங்க அண்ணாநகர் வீட்டை என்பேர்ல எழுதிக் கொடுத்தா நானே 'கடம்பன்' படத்தை ரிலீஸ் செய்யறேன்' என்று சொல்ல வேறு வழியில்லாமல் அந்தத் தயாரிப்பாளரிடம் தன்னுடைய அண்ணாநகர் வீட்டை முதலில் எழுதிக் கொடுத்தார், 'கடம்பன்' வணிகரீதியாக வெற்றி பெறாததால் இப்போது அந்தத் தயாரிப்பளரிடமே அண்ணாநகர் வீட்டை விற்றுவிட்டார்.
