யுவன் ஷங்கர் ராஜா உண்மையில் இப்படிபட்டவரா?- அவரது மனைவி கூறிய தகவல்
March 09, 2018தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளைஞர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் எப்போதும்...
தற்போது அவரை பற்றி அவரது மனைவி சாப்ரூன் நிசார் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். நீங்கள் நினைப்பது போல் யுவன் ஷங்கர் ராஜா மிகவும் அமைதியானவர் கிடையாது. அவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு தெரியும் அவர் எப்படி காமெடி செய்பவர் என்று. வெளியில் மட்டும் தான் அமைதி என்றார்.
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் பியார் பிரேமா காதல் படத்தில் நாயகி ரைசாவுக்கு ஆடை வடிவமைப்பு செய்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா மனைவி.
நடிகர் விஜய் குட்டி பையனாக இருக்கும் பொழுது பார்த்துள்ளீர்களா? ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்!
March 08, 2018இதுவரை பார்த்திராத விஜய் அரியவை புகைப்படம் ஒன்றை அவருடைய தம்பியான நடிகர் விக்ராந்த் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒ...
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளாம் உள்ளது. தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் நடித்து வருகிறார்.
மூன்றாவது முறையாக ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது விஜய்-ன் 62_வது படமாகும்.
நடிகர் விஜய் பற்றிய செய்திகள் என்றால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.
அதை அவருடைய தம்பியான நடிகர் விக்ராந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்:_ அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த புகைப்படத்தை பார்க்கிறேன். நான் 6 மாத குழந்தையாக இருந்தபோது என்னுடைய இரண்டு அண்ணன்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிவு செய்துள்ளார்.
இதற்கெல்லாம் விவாகரத்தா? என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா?
March 08, 2018பொதுவாக திருமணமாகி மாமியார் வீட்டிற்கு செல்லும் மருமகள், வீட்டு வேலை உள்பட எந்த வேலையும் செய்ய விரும்புவதில்லை. ஆனால் புகுந்த வீட்டில் தனக்...
ஆனால் புகுந்த வீட்டில் தனக்கு ஒருவேலையும் இல்லாமல் கணவர் உள்பட வீட்டில் உள்ளவர்கள் அனைத்து வேலைகளையும் செய்துவிடுவதால் விவாகரத்து பெறவுள்ளதாக எகிப்து நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூறியுள்ளார்.
எகிப்து நாட்டை சேர்ந்த 28 வயது இளம்பெண், இரண்டு வருடங்கள் காதலித்த ஒரு நபரை திருமணம் செய்து பலவித ஆசைகளுடன் புகுந்த வீடு சென்றுள்ளார்.
ஆனால் புகுந்த வீட்டில் அவரை ஒரு வேலையும் செய்ய விடாமல் கணவர், மாமியார் மாமனார் ஆகியோர்களே அனைத்து வேலைகளையும் செய்து விடுகின்றார்களாம்.
இதனால் வெறுத்து போன அந்த பெண், ஒரு வேலையும் இல்லாத வீட்டில் எனக்கு என்ன வேலை? என்னை விவாகரத்து செய்து அனுப்பிவிடுங்கள் என்று அடம் பிடிக்கின்றாராம்.
தற்போது அவருக்கும் சில வேலைகளை கணவர் ஒதுக்கியுள்ளதால் அவர் சமாதானம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
’சூர்யகாந்தி’ முதல் ’அருவி’ வரை... பெண்களைப் போற்றிய தமிழ்ப்படங்கள்..!
March 08, 2018சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ம் தேதியான இன்று கொண்டாடப்படும் நேரத்தில் தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து வெளியான திரைப்படங்கள் சிலவற...
சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ம் தேதியான இன்று கொண்டாடப்படும் நேரத்தில் தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து வெளியான திரைப்படங்கள் சிலவற்றை பார்ப்போம்.
சூரியகாந்தி:
பெண்களை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படங்களில் முதன்மையான திரைப்படம் என்றே சொல்லலாம். வேலை பார்க்கும் கணவன் மனைவி இடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் உளவியல் சிக்கல்களையும் அதனால் உண்டாகும் விளைவுகளையும் மிக நுட்பமாகப் பதிவு செய்த திரைப்படம் ’சூரியகாந்தி’. திரைப்படத்தில் ராதா என்னும் கதாபாத்திரத்தில் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நடித்திருப்பார்.
அவள் ஒரு தொடர்கதை:
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1974-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அவள் ஒரு தொடர்கதை’; அன்றைய காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது. தன் குடும்பத்திற்காக வேலைக்குச் செல்லும் பெண்மணியாக மட்டுமல்லாமல் குடும்பத்தினரின் நலனுக்காக தன்னுடைய காதல், மகிழ்ச்சி போன்றவற்றை தியாகம் செய்யும் கவிதாவாகவே நடிகை சுஜாதா திரைப்படத்தில் வாழ்ந்திருப்பார்.
புதுமைப் பெண்:
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் வரதட்சணை கொடுமை, பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை ஆகியவற்றைக் குறித்துப் பேசியது. இத்திரைப்படத்தில் ரேவதியின் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் நம்மால் மறந்துவிட முடியாத அளவிற்கு நடித்திருப்பார்.
சம்சாரம் அது மின்சாரம்:
இயக்குநர் விசு அவர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் பெண்களை மையமாகக் கொண்டதாகத்தான் இருக்கும். எனினும் அவற்றில் தனிச்சிறப்பை பெற்ற திரைப்படம் ’சம்சாரம் அது மின்சாரம்’. விசுவின் திரைப்படங்களில் பெண்களின் பிரச்னைகளுக்கு விசுவின் கதாபாத்திரம் தீர்வு தேடி தருவதாக திரைக்கதை அமைந்திருக்கும். ஆனால், இப்படத்தில் குடும்பச் சிக்கல்களை வீட்டின் முதல் மருமகளான பெண் கதாபாத்திரமே புத்திசாலித்தனமாக செயல்பட்டு தீர்த்து வைக்கும் வகையில் அமைந்திருக்கும்.
மனதில் உறுதி வேண்டும்:
இத்திரைப்படமும் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைப்பும் சில காட்சிகளும் ’அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் சாயலில் அமைந்தாலும், சுஹாசினி ஏற்றிந்திருந்த செவிலியர் கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன், தமிழ் சினிமாவில் தனி இடத்தையும் பெற்றது.
மகளிர் மட்டும் (1994):
பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் அவர்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களைப் பற்றி பேசிய திரைப்படம். படத்தின் திரைக்கதை நகைச்சுவையாக அமைந்திருந்தாலும் சொல்லவந்த கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்யதிருந்தது. பாப்பம்மா, ஜானகி, சத்யா என திரைப்படத்தின் முதன்மை பாத்திரங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பெண்களைப் பிரதிபலித்தன.
கருத்தம்மா:
பெண் சிசுக்களை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் அவலத்தை பாரதிராஜாவைத் தவிர வேறு எவராலும் இந்த அளவிற்கு உண்மைக்கு நெருக்கமாகக் காட்டியிருக்க முடியாது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு படைப்பு ’கருத்தம்மா’.
சிநேகிதியே:
இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் மாறுபட்ட ஒரு திரைப்படம் ’சிநேகிதியே’. த்ரில்லர் படமான இதில், தங்கள்மேல் விழுந்த கொலைப்பழியை பொய் என்று நிரூபிக்கப் போராடும் இரு தோழிகளின் கதையாக அமைந்திருக்கும்.
மொழி:
மொழி
காது கேளாத, வாய் பேச இயலாத ஒரு தன்னம்பிக்கை கொண்ட மாற்றுத்திறனாளிப் பெண்ணையும் அவளை விரும்பும் ஒரு இசைக் கலைஞனின் கதையும் என, தான் எடுத்துக்கொண்ட கதையை கலகலப்புடன் சேர்த்து உணர்ச்சிபூர்வமாகக் கொடுத்திருப்பார் இயக்குநர் ராதா மோகன். இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் கூட்டணி சேரும் ராதா மோகன் - ஜோதிகாவிடமிருந்து ’மொழி’ போன்ற இன்னொரு நல்ல படைப்பை எதிர்பார்க்கலாம்.
36 வயதினிலே
திருமணத்திற்கு பின்பு குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களின் கனவுகள், ஆசைகள், இலட்சியங்கள், தங்கள் கணவன் மற்றும் குடும்பத்தினராலேயே எவ்வாறு உதாசீனப்படுத்தப்படுகிறது; அதில் இருந்து மீண்டு வந்து எப்படிச் சாதிப்பது என்பதைச் சொன்ன படம். ஜோதிகாவிற்கு ஒரு கம் பேக் மூவியாக அமைந்தது.
இறுதிச்சுற்று:
விளையாட்டுத் துறையில் நடைபெறும் அரசியலினால் ஏற்படும் பாதிப்புகளையும், மீன் விற்கும் ஒரு சாமானியப் பெண்மணி குத்துச்சண்டைப்போட்டியில் தேசிய அளவில் சாதிப்பதையும் ஒருசேர காண்பித்த திரைப்படம். ரியல் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், நடிப்பிலும் ரசிகர்களை நாக்அவுட் செய்திருப்பார்.
மகளிர் மட்டும் (2017):
ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் பெயரைக் கொண்டு வெளிவந்தாலும், அப்பெயருக்கு நியாயம் சேர்த்தது இந்த ’மகளிர் மட்டும்’. படத்தில் ஆவணப்பட இயக்குநராகவும் பெரியாரிசக் கொள்கைகள் கொண்ட புதுமைப்பெண்ணாகவும் ஜோதிகா நம் மனதில் பதிந்திருப்பார்.
அறம்:
ஒரு மாவட்ட ஆட்சியராக இருந்துகொண்டு அதிகார வர்க்கத்தின் அனைத்துத் தலையீடுகளையும் மீறி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றப் போராடும் ஓர் இரும்புப் பெண்மணியாக வந்து ’அறம்’ செய்திருப்பார் மதிவதனி.
அருவி:
எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களைக் குடும்பமும் சமுதாயமும் எப்படியெல்லாம் புறக்கணித்து, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்த திரைப்படம் இந்த 'அருவி’. 'அருவி’ கதாபாத்திரத்திற்கென பிறந்தவர்போல இந்தப் படத்தில் ஒன்றி நடித்திருப்பார் அதிதி பாலன்.
திருச்சியில் இறந்த கர்ப்பிணி பெண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உதவி !
March 08, 2018திருச்சி திருவெறும்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மீது காமராஜ் என்ற காவலர் தாக்குதல் நடத்தியதில் பின்புறம் அமர்ந்து வந்த உஷா என்கி...
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் இன்று பெரியளவில் பேசப்பட்டது. காவலர் காமராஜை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் கொடுக்கப்படவுள்ளது. தற்போது வந்த தகவல் படி கமல் சார்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி உஷா குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதியுதவி செய்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.
மீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிடவே கூடாதாம்..சாப்பிட்டால் மரணம் தானாம்!!
March 08, 2018நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும். அல்லத...
அவ்வாறு இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட தோஷத்தை உடலில் உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம்.
அதுபோல், ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை இரு உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அவ்ற்றையும் நாம் உண்ணக் கூடது. உதாரணத்திற்கு தேன் மற்றும் நெய். அவ்வாறான நாம் சாப்பிடக் கூடாத எதிரெதிர் உணவுப்பொருட்களைப் பற்றி காண்போம்.
பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவற்றிலுள்ல ஒரே பண்பு உடலில் தோஷம் உண்டு பண்ணுவதால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகிறது.
திப்பிலியுடன் மீன், அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் இறப்பு உண்டாகி விடுமாம். மீன் பொறித்த எண்ணெய் கூட திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.
நீங்கள் நுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்காக துளசி இருக்கும் கேப்ஸ்யூல் அல்லது துளசி சாறு அருந்தியிருந்தால் அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாதாம்.
தேன் சாப்பிட்ட பிறகு ஒயினோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக் கூடும்.அதனால் முடிந்தவரை தென் அல்லது அது சம்பந்தமான பொருட்கள் சாப்பிடும்போது கூட மற்ற எந்த உணவுப்பொருட்களையும் உண்ணாமல் இருப்பது நல்லது.
எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு , மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடனோ அல்லது அவற்றை சாப்பிட்டவுடனோ பால் குடித்தால் ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
மோருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது கூடவே கூடாது. இவை உடலில் தோஷத்தை உண்டாகும் வாய்ப்புகளை உண்டாக்கிவிடும். இறைச்சி மற்றும் விளக்கெண்ணெய் விளக்கெண்ணெயில் சமைத்த இறைச்சி உடலில் செரிமானமட்டுமல்லாது வயிறு சம்பந்தமான கோளாறுகளை உண்டாக்கிவிடும்.
