இதற்கெல்லாம் விவாகரத்தா? என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா?

பொதுவாக திருமணமாகி மாமியார் வீட்டிற்கு செல்லும் மருமகள், வீட்டு வேலை உள்பட எந்த வேலையும் செய்ய விரும்புவதில்லை. ஆனால் புகுந்த வீட்டில் தனக்...

பொதுவாக திருமணமாகி மாமியார் வீட்டிற்கு செல்லும் மருமகள், வீட்டு வேலை உள்பட எந்த வேலையும் செய்ய விரும்புவதில்லை.

ஆனால் புகுந்த வீட்டில் தனக்கு ஒருவேலையும் இல்லாமல் கணவர் உள்பட வீட்டில் உள்ளவர்கள் அனைத்து வேலைகளையும் செய்துவிடுவதால் விவாகரத்து பெறவுள்ளதாக எகிப்து நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூறியுள்ளார்.

எகிப்து நாட்டை சேர்ந்த 28 வயது இளம்பெண், இரண்டு வருடங்கள் காதலித்த ஒரு நபரை திருமணம் செய்து பலவித ஆசைகளுடன் புகுந்த வீடு சென்றுள்ளார்.

ஆனால் புகுந்த வீட்டில் அவரை ஒரு வேலையும் செய்ய விடாமல் கணவர், மாமியார் மாமனார் ஆகியோர்களே அனைத்து வேலைகளையும் செய்து விடுகின்றார்களாம்.

இதனால் வெறுத்து போன அந்த பெண், ஒரு வேலையும் இல்லாத வீட்டில் எனக்கு என்ன வேலை? என்னை விவாகரத்து செய்து அனுப்பிவிடுங்கள் என்று அடம் பிடிக்கின்றாராம்.

தற்போது அவருக்கும் சில வேலைகளை கணவர் ஒதுக்கியுள்ளதால் அவர் சமாதானம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog