தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்! ரஜினியின் அதிர்ச்சியான பதில்
May 30, 2018ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. அவர் இன்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசார...
இந்நிலையில் அவர் தூத்துக்குடியில் சமூக விரோதிகள் காவல்துறையை தாக்கியதால்தான் பிரச்னை ஆரம்பித்தது. எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் ஸ்டெர்லைட்டிலும் கடைசிநாளில் சமூகவிரோதிகளால் பிரச்னை. ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கவேண்டும் என்ற எண்ணமே யாருக்கும் வரக்கூடாது.
தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தை தாக்கி பேசிய நடிகர் சித்தார்த்
May 30, 2018இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்று போலீஸ் தப்பாக்கிசூடு மற்றும் தாக்குதலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். ...
”போலீஸ் துப்பாக்கிசூடு நடத்த காரணம் முதலில் சமூக விரோதிகள் அவர்களை தாக்கி, கலெக்டர் அலுவலகத்தை தாக்கியது தான்” என ரஜினி பத்ரிகையாளர்களிடம் ஆவேசமாக பேசினார்.
மேலும் இப்போது சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு எதிராக பேசி வருகின்றனர். நடிகர் சித்தார்த் ரஜினியை ட்விட்டரில் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
"இவர்கள் அடுத்து என்ன சொல்வார்கள் தெரியுமா.. இத்தனை வருடமாக தூத்துக்குடியை மாசு படுத்தியது ஸ்டெர்லைட் இல்லை சமூக விரோதிகள் தான்" என சித்தார்த் தெரிவித்துள்ளார்.
வங்கியில் நிகழ்ந்த கொள்ளை... திருடியது யார் தெரியுமா?... தெரிந்தால் ஆடிப்போயிடுவீங்க
May 29, 2018இந்திய மாநிலமான தமிழகத்தில் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 கோடி ரூபாய் ம...
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் சூப்பர் மார்கெட் கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின் மாடி பகுதியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. நேற்று வழக்கம் போல் வங்கியை திறக்க முயன்றபோது பூட்டு திறந்தே இருந்ததது.
இதனால் அதிர்ச்சியடைந்த மேனேஜர், பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் மற்றும் அறைகளை சென்று பார்த்த போது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைககள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். வங்கியின் பூட்டுக்கள் உடைக்கப்படவில்லை, சுவற்றில் ஓட்டை எதுவும் போடப்படவில்லை. ஆனால் லாக்கரில் இருந்த நகை மட்டும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதனால் வங்கியில் பணி புரியும் ஊழியர்கள் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் அதே வங்கியில் பணி புரியும் 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த 3 பேரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடமிருந்து 32 கிலோ நகைளை பறிமுதல் செய்தனர். வங்கி ஊழியர்களே கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் லட்சாதிபதிகளாக மாறிய விவசாயிகள் - அரசு செய்த அதிசயம்!
May 29, 2018மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அளித்த இழப்பீடு தொகையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒரே நாளில் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். மகாராஷ்டர மாநிலத்தி...
மகாராஷ்டர மாநிலத்தில் 5,44,517 ஹெக்டேர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதில், 69,905 ஹெக்டேர் நிலத்தை 13 கிராமங்களிலிருந்து மட்டுமே பெற்றிருக்கிறது.
இதற்கு இழப்பீடாக அவற்றின் உரிமையாளர்களான விவசாயிகளுக்கு மொத்தம் 79,157,590 ரூபாய் வழங்கியுள்ளது.
இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். குறிப்பாக மாரத்வாடாவில் உள்ள ஹட்கோன் கிராமத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.
அங்கு இந் இழப்பீட்டைப் பெற்ற அனைத்து விவசாயிகளும் லட்சாதிபதியாக மாறியிருக்கிறார்கள். ஆனால், சில விவசாயிகளுக்கு நிலம் தொடர்பான சில விவகாரங்களால் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் என்றாலே சாதிவெறி தான், ரஞ்சித் கடுமையான தாக்கு
May 29, 2018ரஞ்சித் தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களை எடுப்பவர். இவர் தமிழகத்தில் சாதியே இருக்க கூடாது என்று எப்போதும் குரல் கொடுத்து வருபவர். இ...
இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள சிவகங்கையில் ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்கள் சிலரை வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதை ரஞ்சித் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ’தமிழர் என்றோர் இனமுண்டு! தனியே அவர்களுக்கோர் குணம் உண்டு! சாதிவெறி’என்று குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் 2-ல் விஜய், அஜித் பட ஹீரோயின்? - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
May 29, 2018நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. இதில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்துகொள்ள போகின்றன...
சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஒரு பட்டியல் வலம் வந்தது. அது போலி என்பது பின்னர் தான் தெரியவந்தது.
தற்போது வந்துள்ள தகவல் படி, 90களில் முன்னணி ஹீரோயினாக இருந்த நடிகை சிம்ரன் பிக்பாஸ் 2ல் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
இதற்குமுன் நடிகை கஸ்தூரி பங்கேற்பார் என்று தகவல் பரவிய நிலையில், அவர் அதை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.