அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, முழு விவரம், ரசிகர்கள் உற்சாகம்
August 13, 2018அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். இப்பட...
இப்படம் முடிந்து அடுத்து அஜித் யாருடன் கூட்டணி அமைக்கப்போகின்றார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வர, தற்போது கிட்டத்தட்ட உறுதியான ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அஜித் அடுத்து போனிகபூர் தயாரிப்பில் தான் நடிக்கப்போகின்றாராம், இது ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போது கொடுத்து வாக்கு தானாம்.
மேலும், இப்படத்தை தீரன் வினோத் இயக்கவுள்ளதாகவும், இதற்காக அஜித் இரண்டு முறை வினோத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதுமட்டுமின்றி இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் ரசிகர்களுக்கு செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
August 13, 2018பிக்பாஸ் துவங்கிய வாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் தவறாமல் இடம்பெற்றவர். பல வாரங்கள் அவரை காப்பாற்றிய ரசி...
வெளியில் வந்ததும் அவர் கமலுடன் பேசும்போது தன் குடும்பம் பற்றி பேசினார் பொன்னம்பலம். "என அப்பாவுக்கு நான்கு மனைவிகள். நான்காவது மனைவிக்கு ஏழாவது குழந்தை நான். எனக்கு பின் நான்கு பேர் உள்ளனர். மொத்த கிராமமும் எங்கள் சொந்தகாரங்க தான். அவ்வளவு பெரிய குடும்பம் தான்" என பொன்னம்பலம் கூறினார்.
தொப்பையை குறைக்க தினமும் 3 நிமிடம் இப்படி பண்ணுங்க போதும்!
August 12, 2018உடல் எடை குறைப்பு குறித்து பலரும் பலவாறாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதீத உடல் எடையினால் ஏற்படுகிற உடலியல் மாற்றங்கள், நோய் பாத...
முன்பை விட இன்றைக்கு பலரும் உடல நலனில் அக்கறை செலுத்துகிறார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்பவர்களுக்காகத் தான் இந்த தகவல். கலோரியை குறைக்க பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.
அவற்றில் ஜப்பானியர்கள் செயல்படுத்தும் இந்த விஷயம் புதுமையாக தெரிந்தாலும் நல்ல பலனைக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
முதலாவது பயிற்சி
தூங்கும் போது தவறான முறையில் படுப்பது கூட சிலருக்கு முதுகு வலி, தொப்பை ஆகியவற்றை ஏற்படுத்தும். வயிற்று தசைகளுக்கு அதிக வேலை கொடுக்காது தொப்பையை வரவைத்திடும். இதனை சரி செய்தாலே எடை அதிகரிப்பு பிரச்சனையை குறைத்துவிடலாம் என்கிறார் ஜப்பான் மருத்துவர் டோஷிகி.
இது முதுகுவலி, இடுப்பு வலி ஆகியவற்றிற்கும் சிறந்த தீர்வாக அமைந்திடும். அதோடு இது வயிற்று தசையையும் வலுவாக்கும்.
இரண்டாவது பயிற்சி
இந்த பயிற்சிக்கு முதலில் ஒரு டவலை எடுத்து அதனை நன்றாக ரோல் செய்து கொள்ளுங்கள். ஏற்ற இறக்கங்களோடு இல்லாமல் எல்லா பக்கமும் சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது தரையில் உட்கார்ந்து கால்களை நீளமாக நீட்ட வேண்டும். அப்படியே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். படுத்ததும் கையில் வைத்திருக்ககூடிய டவலை உங்களின் இடுப்பகுதிக்கு அருகே வைக்க வேண்டும்.
இந்த பயிற்சியை தரையில் மேட் விரித்து செய்யலாம். மெத்தையில் வேண்டாம். அதே போல இப்படி படித்திருக்கும் போது கால்களை 8 முதல் 10 இன்ச் கேப்பில் உள்கூடி திரும்பியிருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள்.
மிக வேகமாக தொப்பையை குறைக்க இந்த ஒரு பொருள் உங்களுக்கு உதவும்! இனி குப்பை தொட்டியில் தூக்கி எறியாதீர்கள்?
August 12, 2018திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்ச...
குறிப்பாக வைட்டமின் கே, சி, பி1, பி6 போன்றவையும், மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது.
அதுமட்டுமின்றி திராட்சையில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலும் நினைக்க முடியாத அளவில் நன்மையை தருகின்றன.
யாருக்கு தான் திராட்சை பிடிக்காது? திராட்சையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டுகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.
ஆனால் பலருக்கும் திராட்சையின் விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
திராட்சையை விரும்பி சாப்பிடும் நாம் அதன் விதைகளை மட்டும் தூக்கி எறிந்துவிடுவோம். இந்த ஒரு பொருள் உடல் எடை குறைக்க உதவி புரியும்.
எடை குறைவை ஊக்குவிக்கும்
திராட்சை விதைகளினால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று, உடல் எடை குறைவதை ஊக்குவிக்கும்.
திராட்சை விதைகள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புத் தேக்கத்தைத் தடுப்பதோடு, உடலில் கொழுப்புக்களின் அளவையும் குறைக்கும்.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை மாயமாக மறைந்து விடும். திராட்சை விதையை சாப்பிட்டால், அது உடலின் ஆற்றலை மேம்படுத்தும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும். இதன் விளைவாக உடல் எடை வேகமாக குறையும்
மல்லாக்கொட்டைன்னு நினைச்சவங்களுக்கு, இல்லயில்ல. நான் மலைக்கோட்டைன்னு காட்டுவாரோ?சிம்பு!
August 11, 2018‘முட்டை போட்ற கோழிக்கே ஆம்லெட் ஊட்டிவிடணும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சிம்பு. சுற்றமும் நட்பும் தவிர தன்னை, ஊரே சேர்ந்து உப்புமாவாக கி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவித்தார் அல்லவா? ‘மாநாடு’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் துவங்கவிருக்கிறது. அதற்குள் சுந்தர்சி யும் சிம்புவை வைத்து இன்னொரு படத்தை இயக்கப் போகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போகிறது.
ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றவே உடம்பெல்லாம் வியர்க்கும் சிம்பு, எதற்காக ரெண்டு செடியை சுற்றி வேலி போட்டார்? அதான் சொன்னோமே… நம்மை விமர்சித்த இதே சினிமாக்காரர்களை வச்சு செய்ய வேண்டும் என்று நினைத்ததால்தான்.
சுந்தர்சி இயக்கவிருக்கும் இந்தப்படம் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த பவன் கல்யாண் படத்தின் ரீமேக். இரண்டு படங்களுக்கும் மாறி மாறி கால்ஷீட் கொடுத்து இன்டஸ்ட்ரியை கதற விடும் எண்ணத்திலிருக்கிறார் சிம்பு.
மல்லாக்கொட்டைன்னு நினைச்சவங்களுக்கு, இல்லயில்ல. நான் மலைக்கோட்டைன்னு காட்டுவாரோ?
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
August 11, 2018அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக அஜித் ரசிகர்கள் த...
இதில் நடித்ததன் மூலம் அருண்விஜய் தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றார் என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது.
ஆனால், முதலில் அருண்விஜய் கதாபாத்திரத்திற்கு இப்படத்தில் டேனியல் பாலாஜியை தான் கமிட் செய்தார்களாம்.
அதை தொடர்ந்து அப்போது அந்த கதாபாத்திரம் கொஞ்சம் சாதுவாக எழுதியிருந்தாராம் கௌதம், மேலும், படக்குழுவினர்களும் இன்னும் கொஞ்சம் பெரிய நடிகர் செய்யலாமே? என்று கூறினார்களாம்.
அதனால் தான் அப்படத்திலிருந்து டேனியல் பாலாஜி விலக, அருண் விஜய் கமிட் ஆனாராம்.