சினிமா பிரபலங்களை சிக்க வைக்கும் அரசியல் வதந்திகள் !

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என தமிழ் மூதாட்டி அவ்வை சொன்னது தமிழ் சினிமாவில் தழைத்து நிற்கும் ஒன்று. உலகில் அப்போதிருந்த சிவாஜி முதல் இப...

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என தமிழ் மூதாட்டி அவ்வை சொன்னது தமிழ் சினிமாவில் தழைத்து நிற்கும் ஒன்று. உலகில் அப்போதிருந்த சிவாஜி முதல் இப்போதிருக்கும் அஜித் விஜய் வரை புகழ் வளர்ந்து வரும் நிலையில் தொடர்ந்து நிறைய அரசியல் கிசுகிசுக்களும் சுற்றிவருகிறது.

ஏற்கனவே நடிகர்களை வாண்ட்டடாக வலைத்தளங்களில் வம்பிழுக்கும் கூட்டத்தில் சிக்காமல் தனித்து நிற்கும் அஜித், நிறைய போராட்டங்களை கடந்து நிற்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைப்பக்கத்தில் சங்கமமாகும் சினிமா ரசிகர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்களை வார்த்தை வன்முறைகளால் தாக்கி கொள்வது ஒருபுறம் இருக்க, பிரபலங்களை பற்றி தெரியாத பல விஷயங்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கிறது.

ஏற்கனவே நடிகர் அஜித்-க்கு ஆஸ்த்திரியா நாட்டு பத்திரிகை ஒன்று சமீபத்தில் இந்தியாவின் சில்வர் ஸ்டார் ஸ்டாலோன் என்று பட்டம் வழங்கியதை தொடர்ந்து உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான புருனே நாட்டு இளவரசி அரசவையில் ஒலிக்கப்பட்ட வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடலை கேட்டதை அடுத்து இணையத்தளத்தில்அஜித் பற்றிய நிறைய தகவல்களை தேடியதுடன் அவருக்கு மாளிகையில் ராஜவிருந்து ஏற்பாடு செய்து அவரின் வருகைக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியானது.

இப்படி ஒருபுறமிருக்க தற்போது அதே இணையத்தில் அஜித் அரசியலில் இணைய போகிறார் என நம்பகமில்லா செய்திகள் பரவி வருகிறது. ஏற்கனவே மத்தியில் அரசாளும் கட்சிக்காக நடந்து முடிந்த பாராளுமன்ற தேரத்லில் ஆதரவு தருவதாக வதந்தி வந்தது. தற்போது மீண்டும் அது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தற்போது சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முக்கிய பிரமுகர்களும் கட்சி தொண்டர்களும், நாட்டு மக்களும் துடிக்கும் நிலையில் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அஜித்தின் மார்க்கெட்டை கொண்டு அரசியலில் இழுக்க பார்க்கிறது,

ஆனால் அவரோ தானுண்டு சினிமா உண்டு என இருக்கும் நிலையில் இது குறித்து நிச்சயம் வாய் திறப்பார் எனவும் எதிர்பார்க்கிறது.

ஏற்கனவே ஒரு மூச்சாய் சில காலம் சூப்பர்ஸ்டாரை இழுத்து வந்த நிலையில் அவரோ ஆன்மீகமும் குடும்பமும் போதும் என இருக்கிறார். விடாத விமர்சனம் தொடாமல் அடுத்து விஜய்யை சீண்டியது அவரோ அடுத்தடுத்து சினிமாவில் பிசியாக இருக்கிறார்.

இனி வரப்போகும் தனுஷின் கொடி படத்திற்கு பிறகு அவரையும் அரசியல் தூண்டில் போட காத்திருக்கிறது. என்ன நடந்தாலும் இவர்கள் அமைதியாக இருக்க போகிறார்கள். பின்னர் தான் தெரிய போகிறது அது வதந்தியென்று.

மேலும் பல...

0 comments

Blog Archive