கல்யாண் ஜுவல்லர்சில் நான் பார்ட்னர் இல்லேங்க! நடிகர் பிரபு சிரிப்பு!

டி.வியை திறந்தால், ‘என் தங்கம் என் உரிமை’ என்று உரிமைக் குரல் எழுப்புகிறார் பிரபு. தொண்டை தண்ணி வற்ற வற்ற அவர் முழக்கமிடுவதை கண்ட திருவாளர்...

டி.வியை திறந்தால், ‘என் தங்கம் என் உரிமை’ என்று உரிமைக் குரல் எழுப்புகிறார் பிரபு. தொண்டை தண்ணி வற்ற வற்ற அவர் முழக்கமிடுவதை கண்ட திருவாளர் பொதுஜனம், கடையே பிரபுவுக்கு சொந்ததமானதா இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டது. கொஞ்சம் மனசாட்சி உள்ளவர்கள் மட்டும், “இல்லேப்பா… அவரு பார்ட்னரு. அவ்ளோதான்” என்று கொஞ்சமாக வெறுப்பேற்றுகிறார்கள்.

இனவெறி இன்வேட்டர்களான இன்னும் சிலர், “அதெப்படி அக்மார்க் தமிழனான பிரபு ஒரு மலையாளிக்கு சப்போர்ட் பண்ணி இவ்ளோ கூவு கூவுறார்” என்றெல்லாம் பிரச்சனை கிளப்பி வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் தன் குழிக்கன்னம் குபீர் ஆகிற அளவுக்கு விளக்கம் கொடுத்தார் இளையதிலகம் பிரபு. ரொம்ப பேர் நான் கல்யாண் ஜூவல்லர்ஸ்ல பார்ட்னர்னு நினைச்சுகிட்டு இருக்காங்க. என்னோட பல வருஷத்து பிரண்ட் அவங்க. வெறும் ஐந்து கடையோட ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு 130 கிளைக்கும் மேல இருக்கு. அதுல 70 கடையை நானே திறந்து வச்சுருக்கேன். அவங்களோட பிராண்ட் அம்பாசிடர்ங்கறதை தவிர வேற ஒன்னும் இல்லீங்க என்று சிரித்தார். அப்புறம் இந்த எம்சிஆர். வேஷ்டி?

அவங்களும் பிரண்டுதானாம். பிரபு சொன்ன இன்னொரு விஷயம் குடும்பஸ்தர்களுக்கு மட்டும் புரிகிற நெகிழ்ச்சி. “நல்ல கதைன்னா மட்டும் செலக்ட் பண்ணி நடிக்கிறேன். மற்றபடி விளம்பர படங்களில் நடிக்கிறேன். இப்ப முழு நேர சந்தோஷமே பேரப் பிள்ளைகளோடு விளையாடுவதுதான். ஸ்கூலுக்கு கொண்டு போய் விடுறேன். ஸ்கூல் முடிஞ்சதும் அழைச்சுட்டு வர்றேன். அவ்ளோ சந்தோஷமா இருக்கு வாழ்க்கை”.

“பிள்ளை பிறந்தா இன்பம். பேரப்பிள்ளை பிறந்தால் பேரின்பம்னு சொல்வார் அப்பா சிவாஜி. இப்பதான் அதோட முழு அர்த்தமும் புரியுது” என்றார் பிரபு.

அப்ப உங்களோட கிசுகிசுக்கப்பட்ட ஹீரோயின்ஸ் கூட இப்ப பாட்டிதான்னு சொல்லுங்க?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About