இன்ஸ்டன்ட் குலாப்ஜாமூன் மிக்ஸ் + டின்களில் அடைத்து விற்கப்படும் குலாப்ஜாமூன்களை அவாய்ட் பண்ணுங்க!

தெரியாதவங்க கூட கடைகள்ல விக்கிற இன்ஸ்டன்ட் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்கி செஞ்சுடறாங்க.. இதுக்கும் சோம்பேறித்தனமா இருக்கறவங்க டின்களில் அடைக்க...

தெரியாதவங்க கூட கடைகள்ல விக்கிற இன்ஸ்டன்ட் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்கி செஞ்சுடறாங்க.. இதுக்கும் சோம்பேறித்தனமா இருக்கறவங்க டின்களில் அடைக்கப்பட்ட குலாப்ஜாமூன்களை வாங்கி பயன்படுத்தறாங்க. இப்பல்லாம் யூடியூப் ல நிறைய பலகாரங்கள் செய்யறது பற்றியான தகவல்கள் வீடியோ காட்சிகளாவே கிடைக்குது. அதப்பார்த்தும் நிறைபேரு விதவிதமா ட்ரை பண்றாங்க..

இந்த ரெடிமேட் குலாப்ஜாமூன் மிக்ஸ் பல பிராண்டுகள்ல கிடைக்குது. ஒண்ணு வாங்கினா ஒண்ணு ப்ரீன்னு பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொடுத்துகிட்டு இருக்கு. இந்த பாக்கெட்டுகளைப் பொறுத்தவரை அதுல இருக்கிற அந்த கோவா மிக்ஸ் என்பது ஒரு கெமிக்கல் கலந்த பிரசர்வ்வேட்டிவ் ஃபுட் மிக்ஸ்தான். பால் பொருட்கள் எதுவா இருந்தாலும் அது ஒரு நாள் ரெண்டு நாளுக்கு மேல தாங்காது. கோவாவும் அப்படித்தான். பாலிலிருந்து எடுக்கும் கோவா 2ம்நாள் புளிச்சுப்போயிடும். ஆனால் இந்த ரெடிமேடு மிக்ஸ் எனப்படும் குலாப்ஜாமூன் மிக்ஸ் 3 முதல் 6 மாதம் வரை கூட கெடாமல் இருக்கின்றது. வா மில்க் ப்ராடக்ட் கெடாம இருக்கனும்னா Formalin என்ற வேதிப்பொருள் மட்டும் கலக்க fssai யின் அனுமதியுண்டு. ஆனால் இதனை கலக்கும் போது அதிகபட்சம் அந்த ப்ராடக்ட் 3 மாசம்வரை தான் கெடாமல் இருக்கும். எனவே இந்த தயாரிப்பு நிறுவனங்களில் சில mercuric chloride, potassium dichromate, hydrogen peroxide, bronopol, and azidiol இப்படி ஏதாவது ஒன்றை அந்த ஃபார்மலின் கெமிக்கலோடு கலந்து அந்த குலாப்ஜாமூன் மிக்ஸ் காலாவதியாவதையும் கெட்டுப்போகாமல் இருப்பதையும் நீட்டிக்க செய்கின்றனர்..

இந்த வேதிப்பொருட்கள் எல்லாம் பின்னொரு நாளில் குடல் கேன்சர், கிட்னி ப்ராப்ளம் இப்படி ஏதாவது ஒரு பக்கவிளைவினை ஏற்படுத்தக்கூடியவ‍ை.. எனவே இன்ஸ்டன்ட் குலாப்ஜாமூன் மிக்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி குலாப்ஜாமூன்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.. அத‍ே போன்ற டின்களில் அடைத்து விற்கப்படும் குலாப்ஜாமூன்களை வாங்கி உண்பதையும் தவிர்ப்பது நல்லது.. இந்த டின் குலாப்ஜாமூன்களும் அதே கெமிக்கல் ஃபார்முலாதான்..

சரி அப்படி என்றால் குலாப்ஜாமூன் எப்படித்தான் தயாரிப்பது என கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.. ப்ரஷ் கோவா வாங்கி செய்வது தான் சிறந்தது.. இந்த ப்ரஷ் கோவா ஆவின் பார்லர்கள்ல கிடைக்குது. இல்லேன்னா பெரும்பாலான டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள்லயும் கிடைக்கும். வாங்கும்போது சர்க்கரை போடாத ப்ளைய்ன் கோவா வாங்கிக்கொண்டு வந்து குலாப்ஜாமூன் செய்தால் சுவையும் நன்றாக இருக்கும். இன்ஸ்டன்ட் மிக்ஸ் வாங்குவதைவிட விலை குறைவாகவும் இருக்கும். உடலுக்கும் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.
எப்படிச் செய்வது?

சர்க்கரை போடாத கோவா 250கிராமுடன் 50 கிராம் மைதா, கொஞ்சூண்டு ஆப்பசோடா அல்லது சிறிதளவு பேக்கிங் பவுடர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசையற பதத்துக்கு இந்த கலவையை பிசைஞ்சு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வாணலியில் நெய்ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.. ஃப்ளேம் அதிகமாகவும் குறைவாகவும் இருக்கக்கூடாது.

500 கிராம் சர்க்கரையில் 200 எம்.எல் தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து பாகு கரண்டியில் எடுத்து பாத்திரத்தில் விடும்போது ட்ராப் ட்ராப்பாக விழுந்து இறுதியாக கடைசி ட்ராப் கரண்டி முனையில் நிற்கவேண்டும்.. இதுதான் பாகுபதம்.. இது கொஞ்சம் திக்கா இருக்கும். இளம்பாகு வேண்டுவோர் இன்னம் கொஞ்சம் முன்னதாக இறக்கிவிடலாம். இன்னும் கொஞ்சம் தாமதமாக கம்பி பதத்துக்கு வந்தால் ட்ரை குலாப்ஜாமூன் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்..
பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகு சூடாக இருக்கும்போதே போட்டுவிட்டு சற்று நேரம் பொறுத்து ஜீராவிலிருந்து வெளியே எடுத்து வேறு பாத்திரத்தில் வைத்து விடுவது நல்லது. இல்லையென்றால் இந்த உருண்டைகள் சர்க்கரைப்பாகு முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். சில நேரங்களில் ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பதால் அழுத்தம் காரணமாக உடைந்து கரைந்தும் போக வாய்ப்புண்டு.

வெளியே எடுத்து வைக்காமல் போனால் பறிமாறும்போ போது ஜீரா இல்லாமல் போய்விடும். எனவே ஜீராவையும் குலாப்ஜாமூன் உருண்டைகளையும் தனித்தனியே பிரித்து வைத்துவிட்டு தேவைப்படும் போது ஜீரா உற்றி பறிமாறிக்கொள்ளலாம். இந்த கோவாவில் செய்யப்படும் குலாப்ஜாமூனின் சுவை நன்றாக இருக்கும். அந்த மிக்ஸ் பாக்கெட் வாங்கி அதுல கிடைக்கிற எண்ணிக்கையை விட இதில் கூடுதலா கிடைக்கும்..

இந்த முறை குலாப்ஜாமூன் செய்யறவங்க சர்க்கரை போடாத கோவா வாங்கி செய்யறதுக்கு ட்ரை பண்ணுங்க.. கெமிக்கலில்லா ஸ்வீட்களோடு தீபாவளியைக் கொண்டாடுங்க!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About